தென்கொரியாவில் கனமழையும் பலத்த சூறாவளியும்

சோல்: தென்கொரியாவின் உல்லாசத்தல தீவான ஜி‌ஷுவில் தொடர்ந்து பெய்த கனமழையாலும் வீசிய பலத்த சூறாவளிக்காற்றி னாலும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பல தெருக்களில் முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றது. மோசமான பருவநிலை காரணமாக பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மின்சார விநியோகம் துண் டிக்கப்பட்டதால் கிட்டத்தட்ட 25,000 வீடுகள் இருளில் மூழ்கிய தாக அதிகாரிகள் கூறினர். கொந்தளிப்புமிக்க கடல் அலையில் ஒரு படகு அடித்துச் செல்லப்பட்டதாகவும் அந்தப் படகில் இருந்த 6 பேரும் பின்னர் காப்பாற்றப்பட்டதாகவும் தொலைக்காட்சித் தகவல்கள் கூறின. தென்கொரியாவைத் தாக்கிய சூறாவளி ஜப்பானை நோக்கி வீசத் தொடங்கியுள்ள தால் புயலுடன் சேர்ந்து கனமழை பெய்யக்கூடும் என்று ஜப்பானிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தென்கொரியாவில் ஜி‌ஷு தீவில் வீசிய பலத்த சூறாவளிக் காற்றின்போது பெய்த கனமழை கார-ணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல கார்கள் சேதம் அடைந்தன. சுமார் 25,000 வீடுகளுக்கு மின்சார விநியோகம் கிடைக்கவில்லை. பாதுகாப்புக் கருதி பல பள்ளிக்கூடங்கள் அங்கு மூடப்பட்டன. படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

அமெரிக்காவில் இருந்து சீனாவுக்குச் செல்லும் ‘பெய் பெய்’, கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி தனது நான்காவது பிறந்தநாளைக் கொண்டாடியது. படம்: இணையம்

19 Nov 2019

அமெரிக்காவிலிருந்து சீனா செல்லும் பாண்டா

பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியேற முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரை போலிசார் மடக்கிப் பிடித்ததில் அவர் காயம் அடைந்தார். ரத்தம் வடியும் முகத்துடன் இருந்த அவரைக் கைது செய்து கொண்டு செல்லும் அதிகாரிகள். படம்: ராய்ட்டர்ஸ்

19 Nov 2019

ஹாங்காங்கில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் காயம்