மலேசியாவில் கைதான 9 ஆஸ்திரேலியர்கள் விடுதலை

கோலாலம்பூர்: சிப்பாங்கில் நடந்த எஃப்-1 கார் பந்தயத்தின் போது மலேசியக் கொடியைப் பிரதிபலிக்கும் உள்ளாடையை அணிந்திருந்த 9 ஆஸ்திரேலியர்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை இங்குள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர். பின்னர் நீதிமன்றம் இவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தபின் விடுதலை செய்தது. தங்களின் செயலுக்காக நீதிமன்றத்தில் இந்த 9 பேரும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டனர். பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக இவர்கள் மீது நேற்று காலை குற்றம் சாட்டப்பட்டது. குற்றவியல் சட்டத்தின் 290ஆவது பிரிவின் கீழ் அந்த 9 ஆஸ்திரேலியர்கள் மீதும் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது. பின்னர் குற்றவியல் சட்டத்தின் 173-ஏ பிரிவைப் பயன்படுத்தி இவர்களுக்கு தண்டனை எதுவும் விதிக்காமல், எச்சரிக்கை செய்து விடுவிப்பது என நீதிமன்றம் முடிவு செய்ததாக நீதிமன்றத் தகவல் தெரிவித்தது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பாதுகாப்புப் படையினர் கடுமையாக நடந்துகொண்டதில் காயமுற்ற ஒருவருக்கு உதவும் ஆர்ப்பாட்டக்காரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

11 Nov 2019

ஐநா: ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் ஈராக் அரசு

கண்ணீர்ப் புகையால் பாதிக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர். படம்: ராய்ட்டர்ஸ்

11 Nov 2019

ஹாங்காங் போராட்டத்தில் வன்முறை