போராளிகள் பகுதியிலிருந்து தப்பிச் செல்லும் சிரியா மக்கள்

டமாஸ்கஸ்: சிரியாவில் அரசாங்க எதிர்ப்பு கிளர்ச்சி யாளர்கள் வசம் உள்ள அலெப்போ நகரைக் கைப்பற்ற அந்நாட்டு ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வரும் வேளையில் ஐஎஸ் போராளிகள் வசம் உள்ள பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தப்பியோடுவதாக தகவல்கள் கூறுகின்றன. பெண்கள், சிறுவர்கள் உள்ளிட் ஏராளமானோர் ஐஎஸ் கட்டு பாட்டில் உள்ள பகுதிகளி லிருந்து வெளியேறி வருகின்றனர்.

அவர்கள் அனைவரும் கிளர்ச்சித் தரப்பினர் வசம் உள்ள பகுதிகளை நாடிச் செல்வதாகக் கூறப்பட்டது. ஐஎஸ் போராளிகளிட மிருந்து தப்பிக்க சிரியாவுக்குள் நுழைந்த குடும்பங்களும் அதில் அடங்கும். சிரியாவில் கிளர்ச்சித் தரப் பினர் வசம் உள்ள பகுதிகளை நாடி வரும் மக்கள் ஐஎஸ் அனு தாபிகளா என்பதை சோதிக்க அவர்களின் கைத்தொலைபேசி களை கிளர்ச்சியாளர்கள் சோதனை செய்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

சிரியா அமைதி உடன்பாடு தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அங்கு சண்டை தீவிரம் அடைந்துள்ளது. அலெப்போ நகரை திரும்பக் கைப்பற்ற சிரியா அரசாங்கப் படை அந்நகரை சுற்றிவளைத்துள்ள நிலையில் 250,000 பேர் அந்நகரில் சிக்கியுள்ளனர். கடந்த இரு வாரங்களில் மட்டும் அந்நகரில் 400 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் சிறுவர்கள் என்று கூறப்பட்டது.

ஐஎஸ் போராளிகள் வசம் உள்ள பகுதிகளிலிருந்து தப்பி வரும் மக்கள். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஹங் ஹோம் பகுதியில் உள்ள ஹாங்காங் பாலிடெக்னிக் யூனிவர்சிட்டியிலும் ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்புவேலிகளை அமைத்தனர். படம்: ஏஎஃப்பி

13 Nov 2019

ஹாங்காங்கின் மத்தியப் பகுதியை முடக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள்; தொடரும் பதற்றநிலை

ரஷ்யப் படைகள் கடந்த மார்ச் மாதம் மேற்கொண்ட தாக்குதலில் அகேல் ஸைனல் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. படம்: தி ஸ்டார்

13 Nov 2019

‘ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த மலேசியர் கொல்லப்பட்டார்’

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளோட்டி எருமை மாட்டின்மீது மோதினார். படம்: தி ஸ்டார்

13 Nov 2019

எருமை மாட்டின்மீது மோதிய மோட்டார் சைக்கிளோட்டி மரணம்