கொலம்பிய அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

ஆஸ்லோ: 2016ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பிய அதிபர் யுவான் சாண்டோசுக்குவழங்கப்படும் என நார்வே குழு அறிவித்தது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மருத்துவம், இயற்பியல், வேதியியல் இவற்றுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு கொலம்பிய அதிபர் மெனுவல் சாண்டோஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக நோபல் பரிசு குழுவின் தலைவர் கேசி குல்மன் அறிவித்தார்.

கொலம்பியாவில் 50 ஆண்டு கால கிளர்ச்சியை முடிவுக்குக்கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட பாடுபட்டதற்காக சாண்டோசுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் பார்க் கிளர்ச்சியாளர்களுடன் அமைதி உடன்பாடு கண்டதில் சாண்டோஸ் முக்கிய பங்காற்றினார். இந்த ஆண்டு ஜூன் மாதம் பார்க் அமைப்புடன் திரு சாண்டோஸ் சண்டை நிறுத்த உடன்பாடு செய்து கொண்டார். இந்த உடன்பாடு குறித்த பொது வாக்கெடுப்பில் 13 மில்லியன் பேர் உடன்பாட்டுக்கு எதிராக வாக்களித்தனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பாதுகாப்புப் படையினர் கடுமையாக நடந்துகொண்டதில் காயமுற்ற ஒருவருக்கு உதவும் ஆர்ப்பாட்டக்காரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

11 Nov 2019

ஐநா: ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் ஈராக் அரசு

கண்ணீர்ப் புகையால் பாதிக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர். படம்: ராய்ட்டர்ஸ்

11 Nov 2019

ஹாங்காங் போராட்டத்தில் வன்முறை