புயல் தாக்கி பலர் மரணம்; ஃபுளோரிடாவில் அவசரநிலை

ஆர்லண்டோ: கரீபியன் கடலில் உருவான ‘மெத்யூ’ என்று அழைக்கப்படும் புயல் தற்போது ஃபுளோரிடாவை நெருங்கியுள்ள வேளையில் முன்னதாக அப்புயல் ஹெய்ட்டியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. புயலில் சிக்கி ஹெய்ட்டியில் குறைந்தது 339 பேர் இறந்த தாகவும் சுமார் 500 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வீடுகள் இடிந்து விழுந்ததிலும் மரங்கள் முறிந்து விழுந்ததிலும் காயமுற்ற வர்கள் ஆவர். பாதுகாப்பு கருதி இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஃபுளோரிடாவில் இப்புயல் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதால் சுமார் 1.5 மில்லியன் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப் பான இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். மீட்பு மற்றும் அவசர கால குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எனவே, அதிபர் ஒபாமா ஃபுளோரிடாவில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

புயலின் பாதிப்பிலிருந்து தப்பிக்க ஃபுளோரிடாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 1.5 மில்லியன் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் இங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் தங்கியுள்ளனர். புயல் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படம்: ஏஎஃப்பி

Loading...
Load next