மன்னிப்பு கேட்டார் டிரம்ப்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட வுள்ள குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் 11 ஆண்டு களுக்கு முன்னர் பெண்களைப் பற்றி கூறிய மோசமான கருத்து களுக்காக தற்போது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டுள் ளார். "பல ஆண்டுகளுக்கு முன்னர் தனிப்பட்ட முறையில் நான் கூறிய கருத்தானது அரசியல் நோக்கத் திற்காக தற்போது சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. இதை விட மோசமான கருத்தை ஒருமுறை ஹில்லரி என்னிடம் முன்னர் தெரிவித்துள்ளார். அதை ஒப்பிட்டுப் பார்க்கையில் நான் கூறியது ஒன்றுமே இல்லை. இருப்பினும் நான் கூறிய கருத்தால் யார் மனமாவது புண் பட்டிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்," என்று டிரம்ப் நேற்று வெளி யிட்டுள்ள அறிக்கையில் குறிப் பிட்டுள்ளார்.

"அப்போது கூறிய அந்த வார்த்தைகள் நான் யார் என்பதை பிரதிபலிக்கவில்லை. நான் அவ்வாறு கூறியது தவறுதான். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்," என்று அவர் கூறியுள்ளார். தான் கூறியதற்காகவும் செய்த தவறுகளுக்காகவும் தான் வருந்தி யிருப்பதாகவும் அவர் குறிப் பிட்டுள்ளார். "நான் ஒரு சிறந்த மனிதர் என்று எப்போதும் கூறியதில்லை. நான் மற்றொருவரைப் போல நடித்ததும் இல்லை. ஆனால் நாளை நான் ஒரு சிறந்த மனிதராக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்," என்று டிரம்ப் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த சர்ச்சைப் பேச்சை உள்ளடக்கிய வீடியோ வா‌ஷிங்டன் போஸ்ட் நாளேட்டில் வெளியானதைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹில்லரி கிளின்டன், டிரம்ப் கூறிய கருத்தை கடுமையாகச் சாடியுள்ளார். "இவர் அதிபராக வர நாம் அனுமதிக்க முடியாது," என்று ஹில்லரி அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!