புயல்: ஹெய்ட்டியில் சுமார் 900 பேர் மரணம்

ஃபுளோரிடா: தற்போது புளோரி டாவில் வீசும் மெத்யூ என்று அழைக்கப்படும் கடும் புயல் முன்னதாக ஹெய்ட்டியில் மணிக்கு 230 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. புயலில் சிக்கி அங்கு கிட்டத்தட்ட 900 பேர் மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை ஆயிரத் தையும் தாண்டக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஆயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்தனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இப்புயல் ஃபுளோரிடா, ஜார்ஜியா, வடக்கு மற்றும் தெற்கு கரோலினா மாநிலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மணிக்கு 195 கி.மீட்டர் வேகத்தில் வீசிய புயல் காற்றைத் தொடர்ந்து பலத்த மழை பெய்தது.

என்றும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவை கடுமையாகப் புயல் தாக்கும் வேளையில் வடக்கு கரோலினா மாநிலத்தில் அவசரநிலையை அறிவித்துள் ளார் அதிபர் ஒபாமா. மெத்யூ புயலின் பாதிப்பு தொடர்ந்து வருவதாகவும், மக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு மதிப்பிட முடியாததாகும் என்றும் குறிப்பிட்டுள்ள ஒபாமா, பாதுகாப்பு எச்சரிக்கைகளை மக்கள் தீவிரமாக பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். கரீபியன் கடலில் உருவான மெத்யூ புயல் பகாமாஸ் நாடு வழியாக அட்லாண்டிக் கடலுக்குள் புகுந்து ஹெய்ட்டி, அமெரிக்கா, கியூபா, உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு உள்ள பகுதிகளில் இருந்து பலர் வெளியேற்றப் பட்டுள்ளனர். புயல் தாக்கிய பகுதிகளில் சுமார் ஆயிரக்கணக்கான வீடு களுக்கு மின்சாரம் துண்டிக் கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இப்புயலின் வேகம் தற்போது குறைந்து வருவதாகக் கூறப்படு கிறது.

Loading...
Load next