இந்தோ. படகு விபத்து; 7 பேரைக் காணவில்லை

ஜகார்த்தா: இந்தோனீசிய ஆற்றில் ஒரு படகு வெள்ளிக்கிழமை மூழ்கியதைத் தொடர்ந்து 18 பேர் காப்பாற்றப்பட்ட நிலையில் இன்னும் 7 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் கூறினர். அந்த ஏழு பேரும் 12 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆவர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ள வேளையில் இதுவரை அவர்களில் யாரையும் மீட்புக் குழுவினர் கண்டுபிடிக்க முடிய வில்லை. அப்பகுதியில் பெய்யும் மழை, சகதி நீர், கொந்தளிப்பு மிக்க அலைகள் ஆகியன மீட்புப் பணிகளுக்கு இடையூறாக உள்ளன என்று மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆற்றில் மிக ஆழத்தில் சரியாகப் பார்க்க முடியவில்லை என்பதால் தேடும் மற்றும் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மீட்புப் பணியாளர் ஒருவர் கூறி னார். இதுவரை யாரும் மீட்கப் படவில்லை என்பதால் அந்த 7 பேரும் உயிர் இழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுவதாக அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். அந்த மரப்படகில் பள்ளி மாணவர்கள் 25 பேர் சென்றதாகக் கூறப்பட்டது. ஜாவாவில் உள்ள பெங்கவான் சோலோ ஆற்றைக் கடந்து கரையைச் சென்று சேர 7 மீட்டர் தொலைவு மட்டுமே இருந்த நிலையில் அப்படகு ஆற்று நீரில் மூழ்கியது. அப்படகில் அளவுக்கு அதிக மானோர் பயணம் செய்தது விபத்துக்குக் காரணமாக இருக் கலாம் என்று சந்தேகிக்கப்படு கிறது.

கிழக்கு ஜாவாவில் உள்ள ஓர் ஆற்றில் ஒரு படகு மூழ்கியதைத் தொடர்ந்து காணாமற்போன 7 பேரைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அப்படகில் மாணவர்கள் 25 பேர் சென்றனர். அவர்களில் 18 பேர் காப்பாற்றப்பட்டனர். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தனக்காக ஒன்று, மனைவிகளுக்காக 19 என 20 ரோல்ஸ்ராய்ஸ் கார்களை மன்னர் மூன்றாம் ஸ்வதி வாங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. படம், காணொளி: ஸிலிக்காஸி என்பவரின் டுவிட்டர் பக்கம்

19 Nov 2019

15 மனைவிகளுக்கு 19 ரோல்ஸ்ராய்ஸ் கார்கள்

கடந்த ஆண்டு இந்தப் பதவியில் சேர்ந்த இவரது சம்பளம், 18 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் என்றும் கூறப்பட்டது.

19 Nov 2019

ஆஸ்திரேலியா: ஆக அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாகியாக இலங்கை பெண்மணி