துக்க வீட்டில் ஆகாயத் தாக்குதல்: 140 பேர் பலி

ரியாத்: சனாவில் உள்ள சமூ­கக்­கூ­டம் ஒன்றில் இறுதிச் சடங்கு நடை­பெற்­ற­போது அங்கு ஆகாயத் தாக்­கு­தல் நிகழ்த்­தப்­பட்­ட­தில் 140க்கும் அதி­க­மா­னோர் பலி யானதை அடுத்து ஏமனில் போரா­ளி­களுக்கு ஏதி­ரா­கப் போரிட்டு வரும் சவூதி தலைமை­யி­லான கூட்டணி, அமெ­ரிக்­கா­வு­டன் இணைந்து தாக்குதல் குறித்த விசாரணை மேற்­கொள்­ளத் தயா ராக இருப்­ப­தாக அறி­வித்­துள்ளது. “சென்ற ஆண்டு மார்ச் மாதத்­தி­லி­ருந்து ‌ஷியா போரா­ளி­களுக்கு எதிராக மேற்­கொள்­ளப்­பட்ட ராணுவ நட­வ­டிக்கை­களி­லேயே ஆக மோச­மா­னது,” என்று இந்தத் தாக்­கு­தலை ஈரானின் ஆதரவு பெற்ற ஹுதி போரா­ளி­கள் அமைப்பு குறிப்­பிட்­ட­து­டன் அதற்­காக அராபியக் கூட்­ட­ணியைச் சாடி­யுள்­ளது. தக்குதலில் பொது மக்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து சவூதி அரேபியாவுடன் கூட்டணி யாகச் செயல்படுவது குறித்து மறு ஆய்வு செய்ய அமெ-ரிக்கா உடனடி நடவடிக்கையை மேற்கொண் டுள்ளது. இந்தத் தாக்­கு­த­லில் 525க்கும் மேற்­பட்­டோர் காய­முற்­ற­தாக ஐநா குறிப்­பிட்­டது.

தாக்­கு­தல் நடத்­தப்­பட்ட நேரம், இடம், சுற்­றுப்­பு­றம் ஆகியன குறித்த விவ­ரங்களை விசாரணை அதி­கா­ரி­களுக்கு வழங்க­வும் தயாராக இருப்­ப­தாக கூட்டணி தெரி­வித்­துள்­ளது. சனாவில் உள்ள சமூகக் கூடம் ஒன்றில் கூடி துக்கம் அனு­ச­ரித்­த­வர்­கள் மீது தொடுக்­கப்­பட்ட தாக்­கு­த­லின் தீவிரத்தை­யும் ஏற்பட்ட சேதத்தை­யும் கண்டு உதவிப் பணி­யா­ளர்­கள் அதிர்ச்சி அடைந்­தி­ருப்­ப­தாக ஏம­னுக்­கான ஐநாவின் மனி­தா­பி­மான ஒருங்­கிணைப்­பா­ளர் ஜமீ மெக்­கோல்ட்­ரிக் கூறினார். பொதுமக்களின் பாது காப்பு உறுதிப்படுத்தப்பட வேண் டும் என்றும் அவர் சொன்னார். விசாரணை அறிக்கை­களின் அடிப்­படை­யில் சவூதி தலைமை­யி­லான கூட்­ட­ணிப் படை­களுக்கு ஆதரவு அளிப்­பது பற்றி மறுஆய்வு செய்­யப்­படும் என ஐநா தெரி­ வித்­துள்­ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பாதுகாப்புப் படையினர் கடுமையாக நடந்துகொண்டதில் காயமுற்ற ஒருவருக்கு உதவும் ஆர்ப்பாட்டக்காரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

11 Nov 2019

ஐநா: ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் ஈராக் அரசு

கண்ணீர்ப் புகையால் பாதிக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர். படம்: ராய்ட்டர்ஸ்

11 Nov 2019

ஹாங்காங் போராட்டத்தில் வன்முறை