ஜெருசலம் பயங்கரவாதத் தாக்குதலில் 6 பேர் காயம்

ஜெருசலேம்: இலகு ரயில் நிலையம் ஒன்றின் அருகில் காத்திருந்தோர் மீது காரிலிருந்த பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் அறுவர் காயமுற்றனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவ்விருவரில் போலிஸ் அதிகாரி ஒருவரும் அடக்கம். போலிசார் நடத்திய பதில் தாக்குதலில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த அந்த துப்பாக்கிக்காரன் கொல்லப்பட்டான். ஜெருசலம் போலிஸ் தலைமை யகத்துக்கு அருகில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. பொது மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட அந்த பயங்கரவாதி, போலிசாரைக் கண்டதும் அவர் களை நோக்கி சுடத் தொடங்கி யதாகத் தகவல்கள் தெரிவிக் கின்றன. தாக்குதல் நடத்தி, பின் மாண்டுபோன அந்த ஆடவர் 39 வயதான பாலஸ்தீனியர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கத்தி, துப்பாக்கி, காரேற்றிக் கொல்லுதல் போன்ற பயங்கரவாதத் தாக்குதல் அந்தப் பகுதியில் நடத்தப்பட்டு ஓராண்டு நிறைவை நெருங்கும் வேளையில் இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

Loading...
Load next