சீனாவில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 8 பேர் மரணம்

சீனாவில் நான்கு குடியிருப்புக் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் எட்டுப் பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். ஸிஜியாங் மாநிலத்தில் உள்ள அக்கட்டடங்கள் நேற்று இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினரும் ராணுவத்தினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டடங்கள் இடிந்து விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை. அதுகுறித்த விசாரணை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படம்: ஏஎஃப்பி

Loading...
Load next