வெளிநாட்டு வங்கிகளில் மேலும் 30 மில்லியன் ரிங்கிட் கண்டுபிடிப்பு

கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்ட முதல் நாள் அதிரடி சோதனையில் நீர்வளத் துறையைச் சேர்ந்த இரு உயர் அதிகாரிகளிடமிருந்து 114 மில்லியன் ரிங்கிட் (37.9 மில்லியன் வெள்ளி) மதிப்புள்ள ரொக்கமும் சொத்துகளும் கைப்பற்றப்பட்டன.

இந்த நிலையில் ஆறு நாட் களுக்குப் பிறகு இதே விவகாரம் தொடர்பில் வெளிநாட்டு வங்கி களில் மேலும் 30 மில்லியன் ரிங்கிட் ரொக்கமும் 30 மில்லியன் மதிப்புள்ள சொத்துப் பத்திரங் களும் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். சாபாவில் தண்ணீர்த் திட்டங் களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மோசடி செய்ததாகக் கூறப்படும் சாபா நீர் வளத் துறை இயக்குநர் அக் தாஹிர் அக் தாலிப், 54, துணை இயக்குநர் டியோ சீ கோங், 52 ஆகியோரிடம் நடத்தப் பட்ட விசாரணையில் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு இட்டுச் செல் லும் ரொக்கமும் சொத்துப் பத்திரங்களும் பதுக்கி வைக்கப் பட்ட விவரங்கள் தெரிய வந்தன.

இம்மாதம் 4ஆம் தேதி இரு அதிகாரிகளும் கைது செய்யப் பட்டனர். இருவரும் 200 மில்லியன் ரிங்கிட் வரை மோசடியில் ஈடு பட்டிருக்கலாம் என்று நம்பப்படு கிறது.

அதிகாரப் துஷ்பிரயோகம், கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து சாபாவில் நீர் வளத்தைப் பெருக்குவதற்காக ஒதுக்கப்பட்ட பல மில்லியன் ரிங்கிட்டை மோசடி செய்தது தொடர்பில் அவர்களிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தின் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட பல மில்லியன் ரொக்கம், நகைகள், சொத்துப் பத்திரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகள் பார்வைக்கு வைத்துள்ளனர். படம்: த ஸ்டார்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!