குண்டுவெடிப்பு அபாயம்: பேங்காக்கில் உச்ச பாதுகாப்பு

பேங்காக்: அண்மையில் தாய்லாந் தின் தெற்கு மாநிலங்களில் பல உயிர்களைப் பலி வாங்கிய பயங்கர குண்டுவெடிப்பு சம்ப வங்கள் நடைபெற்ற நிலையில் பேங்காக்கிலும் குண்டுவெடிப்புகள் நடைபெறும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. இதைத் தொடர்ந்து தலைநகர் பேங்காக்கின் விமான நிலையம் உட்பட முக்கிய இடங்களில் பாது காப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

தாய்லாந்தில் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று பேங்காக்குக்கு அருகில் உள்ள மாநிலத்தில் கார் குண்டு வெடிப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தாய்லாந்து தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

“குண்டுகள் தயாரிக்கும் பொருட்கள், வாகனப் போக்கு வரத்து என வழக்கத்திற்கு மாறாக எதுவாயிருந்தாலும் அணுக்கமாக கண்காணிக்கும்படி துணைப் பிரதமர் உத்தரவிட்டுள் ளார்,” என தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஜெனரல் தாவிப் நெட்னியோம் கூறியுள்ளார். “பேங்காக் ஏன் குறிவைக்கப்படு கிறது,” என்று கேள்விக்குப் பதில் அளித்த அவர், “அதுதான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நகரம்,” என்றார்.

ஆனால் எந்தெந்த கும்பல் களுக்கு இதில் தொடர்பு உள்ளது போன்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை. பல வெளிநாட்டுப் பயணிகள் விரும்பிச் செல்லும் தாய்லாந்தின் தெற்கு மாநிலங்களில் அண்மைய காலமாக பல குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இதில் குறிப்பாக ஆகஸ்ட் 11, 12ஆம் தேதிகளில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் நான்கு தாய்லாந்து நாட்டவர் கொல்லப் பட்டதுடன் வெளிநாட்டவர் உட்பட பலர் காயமடைந்தனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்ட எரவான் கோயில் வளாகத்தில் ஒரு பயணியின் பையை காவல்துறை அதிகாரி ஒருவர் சோதனையிடுகிறார். படம்: ஏஎஃப்பி