காபூலில் தாக்குதல்

காபூல்: -ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சிறப்பு தொழுகையில் பங்கேற்ற வர்களில் 14 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாக போலிசார் கூறினர். காவலர்கள் உடையில் வந்திருந்த மூன்று தீவிரவாதிகள் ஒரு பள்ளிவாசலுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். இந்தத் தாக்குதலில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் 36 பேர் படுகாயமடைந்ததாகவும் போலிசார் கூறினர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.