நஜிப்பிடம் புதிய செயலி

பெட்டாலிங் ஜெயா: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் கைத்தொலைபேசி செயலி ஒன்றைத் தொடங்கியுள்ளார். கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப்ஸ்டோர் வெளியிட்டுள்ள செயலி விளக்கத்தின்படி, திரு நஜிப்புடன் மக்கள் தொடர்புகொண்டு அவர்களின் கருத்துகளை யும் பரிந்துரைகளையும் கூறுவதற்கு வசதியாக புதிய செயலி உருவாக்கப் பட்டுள்ளது. இந்த செயலி மூலம், பிரதமர் நஜிப்பின் ஆகக் கடைசியான அறிவிப்புகள் மற்றும் நிலவரங்களை மக்கள் அறிந்து கொள்ள முடியும்.