அன்வாரின் மனு குறித்த தீர்ப்பு தள்ளிவைப்பு

புத்ராஜெயா: மலேசியாவில் எதிர்க்கட்சி முன்னாள் தலைவர் அன்வார் இப்ராகிம், - தனக்கு எதிரான இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கின் தண்ட னையை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் தீர்ப்பை கூட்டரசு (பெடரல்) நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தீர்ப்பை அறிவிக்க இன்னொரு தேதியில் நீதிமன்ற அவை கூடும் என்று ஐவர் கொண்ட நீதிபதிகள் குழுவின் தலைவரான தலைமை நீதிபதி ‌ஷுல்கிஃபிலி அகமது மகினுதின் தெரிவித்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், இந்த வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிலைநிறுத்துவது எனக் கூட்டரசு நீதிமன்றம் எடுத்த முடிவை மறுஆய்வு செய்யக் கோரி அன்வார் இப்ராகிம் விண்ணப்பம் செய்திருந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!