ரஷ்ய விமானங்கள் மீண்டும் அலெப்போவில் குண்டுவீச்சு

டமாஸ்கஸ்: சிரியாவில் அலெப்போ நகரில் ரஷ்ய விமானங்கள் மீண்டும் குண்டு களை வீசி கடுமையாகத் தாக்கி வருவதாக தகவல்கள் கூறு கின்றன. அந்நகரில் அரசாங்க எதிர்ப்பு கிளர்ச்சித் தரப்பினர் வசம் உள்ள பகுதிகளில் ரஷ்ய விமானங்கள் என்றும் இல்லாத அளவுக்கு அதிக குண்டுகளை வீசித் தாக்கி வருவதாக கிளர்ச்சித் தரப்பினர் கூறியுள் ளனர்.
அத்தாக்குதலில் குழந்தைகள் உள்பட குறைந்தது 25 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
அப்பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேறுவதற்கு வசதியாக சிரியா அரசாங்கம் தற்காலிகமாக சில மணி நேரம் தாக்குதலை நிறுத்தி வைத்த பிறகு மீண்டும் தாக்குதல் தொடங்கிய வேளை யில் ரஷ்ய விமானங்களும் அரசாங்கப் படையினருக்கு ஆதரவாக தாக்குதலை தீவிரப் படுத்தியுள்ளன.
சிரியாவில் நீடிக்கும் உள் நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் முயற்சியில் காணப் பட்ட சண்டை நிறுத்த உடன்பாடு சென்ற மாதம் தோல்வி அடைந் தது. அதனைத் தொடர்ந்து சிரியாவில் அலெப்போ நகரில் சண்டை தீவிரம் அடைந்துள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்த ஆண்டு இந்தப் பதவியில் சேர்ந்த இவரது சம்பளம், 18 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் என்றும் கூறப்பட்டது.

19 Nov 2019

ஆஸ்திரேலியா: ஆக அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாகியாக இலங்கை பெண்மணி

பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியேற முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரை போலிசார் மடக்கிப் பிடித்ததில் அவர் காயம் அடைந்தார். ரத்தம் வடியும் முகத்துடன் இருந்த அவரைக் கைது செய்து கொண்டு செல்லும் அதிகாரிகள். படம்: ராய்ட்டர்ஸ்

19 Nov 2019

ஹாங்காங்கில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் காயம்