மியன்மாரின் ராக்கின் மாநிலத்தில் வன்முறை

யங்கூன்: மியன்மாரின் ராக்கின் மாநிலத்தில் ஆயுதம் ஏந்திய கும்பலுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 12 பேர் உயிரிழந்ததாக ஊடகத் தகவல்கள் கூறின. ரோஹிங்யா முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் துப்பாக்கிகள் மற்றும் நீளமான கத்திகள் வைத்திருந்த நூற்றுக் கணக்கானோர், ராணுவத் தினரைத் தாக்கியதில் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரும் அதில் கொல்லப்பட்டதாகக் கூறப் பட்டது. ஒரு கிராமத்திற்கு அருகில் கும்பல் உறுப்பினருக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த கடும் சண்டைக்குப் பிறகு அவ்விடத்தில் 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக ராணுவத்தினர் கூறினர். நீளமான கத்திகளும் குச்சிகளும் அந்த சடலங்கள் மீது காணப்பட்டதாக ஊடகத் தகவல் கூறியது. பங்ளாதேஷ் எல்லைக்கு அருகே போலிசார் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் மியன்மார் ராணு வத்தினர் அதிக அளவு குவிக்கப்பட்டுள்ளனர்.

மியன்மாரின் ராக்கின் மாநிலத்தில் 2012ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் கலவரங்களால் அங்கு பதற்றம் நிலவுகிறது. அப்போது அங்கு நடந்த கலவரத்தில் நூற்றுக்கும் அதிக மானோர் கொல்லப்பட்டனர். சண்டைக்குப் பயந்து ஆயிரக்கணக்கான ரோஹின்யா மக்கள் அங்கிருந்து வெளி யேறினர். இப்போது அந்த மாநிலத்தில் மீண்டும் வன்முறை கள் வெடித்துள்ளன. இதனால் ரோஹிங்யா குடியேறிகள் பலர் அங்கிருந்து வெளியேறக்கூடும் என்பதால் மலேசிய அதிகாரிகள் உச்சகட்ட விழிப்பு நிலையில் இருப்பதாக மலேசியா தெரிவித்துள்ளது.