தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் காலமானார்

பேங்காக்: தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் நேற்று காலமானதாக அரண்மனைத் தகவல் தெரிவித்தது. அவருக்கு வயது 88. 70 ஆண்டுகள் மன்னராக இருந்த பூமிபோல் அதுல்யதேஜ் பேங்காக் நேரப்படி நேற்று பிற்பகல் 3.52 மணியளவில் மரணம் அடைந்ததாக அரண்மனை தெரிவித்தது. அண்மைய ஆ-ண்டுகளாக மன்னரின் உடல்நிலை பாதிக்கப் பட்டிருந்தது. குறிப்பிட்ட சில பொது நிகழ்ச்சிகளில் மட்டுமே அவர் கலந்துகொண்டார். கடந்த ஈராண்டுகளில் பெரும் பாலான நாட்களை மருத்துவ மனையில் செலவழித்த மன்னரின் உடல்நிலை கடந்த வாரம் மோசம் அடைந்தது. மன்னரின் உடல்நிலை சீராக இல்லை என்றும் சிறுநீரகக் கோளாறு மற்றும் ரத்த அழுத்தக் குறைவால் மன்னரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் ஞாயிறன்று அரண்மனை அறிக்கை வெளியிட்டது.

அந்த அறிக்கையைத் தொடர்ந்து மன்னரின் உடல்நிலை குறித்து கவலை அடைந்த தாய்லாந்து மக்கள் அவர் குணமடைய பிரார்த்தனை செய்து வந்தனர். மன்னர் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு வெளி யில் ஒன்றுகூடிய நூற்றுக் கணக்கானோர் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில் மன்னர் மரணம் அடைந்த செய்தி கேட்டு மக்கள் மீளாத் துயரத்தில் மூழ்கினர். உலகின் ஆக நீண்ட காலம் மன்னராக இருந்தவர் பூமிபோல் அதுல்யதேஜ். அவர் தனது 18வது வயதில் 1946ஆம் ஆண்டு அரியணையில் அமர்ந்தார். தாய்லாந்தில் அரசியல் நெருக்கடி மற்றும் பல புரட்சிகள் ஏற்பட்ட போதெல்லாம் அவற்றி லிருந்து மீள மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தவர் மன்னர் பூமிபோல். தாய்லாந்து மக்கள் விரும்பும் மன்னராக அவர் விளங்கி வந்தார். அவரது மறைவு தாய்லாந்து மக்களுக்கு பெரிய இழப்பாகும்.

தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ். கோப்புப்படம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தனக்காக ஒன்று, மனைவிகளுக்காக 19 என 20 ரோல்ஸ்ராய்ஸ் கார்களை மன்னர் மூன்றாம் ஸ்வதி வாங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. படம், காணொளி: ஸிலிக்காஸி என்பவரின் டுவிட்டர் பக்கம்

19 Nov 2019

15 மனைவிகளுக்கு 19 ரோல்ஸ்ராய்ஸ் கார்கள்

கடந்த ஆண்டு இந்தப் பதவியில் சேர்ந்த இவரது சம்பளம், 18 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் என்றும் கூறப்பட்டது.

19 Nov 2019

ஆஸ்திரேலியா: ஆக அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாகியாக இலங்கை பெண்மணி