டிரம்ப்: அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டோனல்டு டிரம்ப், தன் மீது கூறப்பட்ட குற்றச் சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் பொய் என்று கூறியுள்ளார். தேர்தல் நெருங்கிவரும் வேளை யில் டிரம்ப் மீது கடும் குற்றச் சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. கடந்த 2005-ஆம் ஆண்டு பெண்கள் பற்றி டிரம்ப் கூறிய கருத்துகள் தற்போது வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத் தின. இந்நிலையில் ஜெசிக்கா லீட்ஸ், ரசேல் குரூக்ஸ் ஆகிய 2 பெண்கள் டிரம்ப் தங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டினர்.

அப்பெண்களின் குற்றச்சாட்டை டிரம்ப் திட்டவட்டமாக மறுத் துள்ளார். ஃபுளோரிடாவில் நடந்த நிகழ்ச்சியில் ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் உரையற்றிய போது தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் முற்றிலும் பொய் என்று கூறினார். பத்திரிகைகளும் ஊடகங்களும் தன்னை எதிர்த்துப் போட்டியிட வுள்ள ஹில்லரி கிளின்டனுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன என்றும் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்த ஆண்டு இந்தப் பதவியில் சேர்ந்த இவரது சம்பளம், 18 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் என்றும் கூறப்பட்டது.

19 Nov 2019

ஆஸ்திரேலியா: ஆக அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாகியாக இலங்கை பெண்மணி

பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியேற முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரை போலிசார் மடக்கிப் பிடித்ததில் அவர் காயம் அடைந்தார். ரத்தம் வடியும் முகத்துடன் இருந்த அவரைக் கைது செய்து கொண்டு செல்லும் அதிகாரிகள். படம்: ராய்ட்டர்ஸ்

19 Nov 2019

ஹாங்காங்கில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் காயம்