புதிய மலேசிய மாமன்னராக கிளந்தான் சுல்தான் தேர்வு

கோலாலம்பூர்: கிளந்தான் சுல்தான் ஐந்தாம் சுல்தான் முகம்மது மலேசியாவின் அடுத்த மாமன்னராகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார். இப்போதைய மாமன்னர் கெடா சுல்தான் துவாங்கு அப்துல் ஹலிம் முவாட்சம் ஷாவின் ஐந்து ஆண்டு பதவிக் காலம் வரும் டிசம்பர் 12ல் முடிவுக்கு வந்ததும் சுல்தான் முகம்மது டிசம்பர் 13ஆம் தேதி மாமன்னராகப் பதவி ஏற்பார். இவர் ஐந்து ஆண்டு காலத்திற்கு பதவியில் நீடிப்பார். பேராக் சுல்தான் நஸ்ரின் ஷாவை துணைப் பேரரசராக ஆட்சி யாளர் மன்றம் தேர்ந்தெடுத்தது.

தென்கொரியாவில் பேருந்து விபத்து சோல்: தென்கொரியாவில் சுற்றுலா பேருந்து ஒன்று நெடுஞ்சாலை தடுப்புக் கம்பியில் மோதி தீப்பற்றிக் கொண்டதில் 10 பேர் உயிரிழந்ததாக போலிசார் கூறினர். அந்தப் பேருந்தில் 19 பேர் சென்றதாகக் கூறப்பட்டது. பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!