பேங்காக்: கொண்டாட்டத்தை ஒரு மாதத்திற்கு தவிர்க்கவும்

பேங்காக்: மறைந்த மன்னர் பூமிபோல் அதுல்யதேஜிற்கு இறுதி மரியாதை செலுத்த தாய்லாந்து மக்கள் பேங்காக்கில் உள்ள அரண்மனைக்கு வெளியில் வரிசையில் காத்திருக்கின்றனர். மறைந்த மன்னருக்கு மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக அரண்மனை திறந்து விடப்பட்டுள்ளது. சிறிய குழுக்களாக மக்கள் அரண்மனைக்குள் அனுப்பப்பட்டு வருகின்றனர். அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் குறிப்பு புத்தகத்தில் கையெழுத்திட மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கிராமப்புறங்களில் உள்ள மக்கள், பேங்காக் வருவதற்கு வசதியாக இலவச போக்குவரத்து வசதி அளிக்கப்பட்டுள்ளது.

நாடே துக்கத்தில் மூழ்கியுள்ள வேளையில் அங்கு விளையாட்டுப் போட்டிகள் இல்லை. இசை நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை. குறைந்தது 30 நாட்களுக்கு மக்கள் கொண்டாட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என்று தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ-=சா கேட்டுக்கொண்டார். ஆடல், பாடல் போன்ற எந்த ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சி களையும் ஒளிபரப்பக்கூடாது என்று தொலைக்காட்சி நிலையங் கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. மறைந்த மன்னர் பூமிபோலின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் ஆவணப்படங்கள் மட்டுமே தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

பேங்காக்கில் உள்ள அரண்மனைக்கு வெளியில் கூடியுள்ள மக்கள் மறைந்த மன்னர் பூமிபோல் அதுல்யதேஜிற்கு இறுதி மரியாதை செலுத்துகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விதிமீறுவோருக்கு 2009 போக்குவரத்துச் சட்டத்தின்கீழ் 500,000 ரூப்பியா (S$48) அபராதமும் இரு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். படம்: தி ஜகார்த்தா போஸ்ட் / ஏஷியா நியூஸ் நெட்வொர்க்

15 Nov 2019

ஜகார்த்தாவிலும் நடைபாதையில் மின்ஸ்கூட்டர் ஓட்டத் தடை

துப்பாக்கியில் இருந்த கடைசி தோட்டாவால் தன்னையே மாணவன் சுட்டுக்கொண்டான். படம்: ஸூமா / டிபிஏ

15 Nov 2019

பள்ளியில் துப்பாக்கிச்சூடு: இருவர் மரணம், மூவர் காயம்

பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுப்பயணிகள், ஆங்கோர் ஆலயத்தைச் சுற்றி வர யானைச் சவாரியைப் பெரிதும் விரும்புகின்றனர். படம்: ஏஎஃப்பி

15 Nov 2019

ஆங்கோர் வாட் ஆலயத்தில் யானைச் சவாரி ரத்து