மலேசிய இந்தியர் வளர்ச்சித் திட்டம்

இந்தியர்கள் நீண்டகாலம் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்திய சமூகத்துக்கான தேசிய கொள்கை வரைவுத் திட்டம் ஜனவரி மாதம் தொடங்கப்படும் என்று மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் அறிவித்துள்ளார். "இந்தியர்களின் வளர்ச் சிக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய 'வாழும் ஆவணமாக' அந்தத் திட்டம் அமையும். கல்வியில் தொடங்கி வீடமைப்பு, தொழில் முனைப்பு என்று எல்லாவற்றி லும் இந்தியர் முன்னேற்றத் துக்கு வழி ஏற்படுத்தும் அம் சங்கள் அவை," என்றார் அவர். மலேசியா முழுவதும் உள்ள தமிழ்ப் பள்ளிகள் அனைத்திலும் பாலர் பள்ளிகள் அமைவது கட்டா யமாக்கப்படும் என்றும் அதுபற்றி வரைவுத் திட்டத்தில் அறிவிக்க இருப்பதாகவும் நேற்று நடை பெற்ற மலேசிய இந்தியர் காங்கி ரசின் 70வது ஆண்டு பேராளர் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசியபோது திரு நஜிப் தெரிவித்தார்.

வரைவுத் திட்ட அம்சங்கள் அனைத்தையும் சுமுகமாக அமல் படுத்த வலுவான செயலகம் ஒன்றும் அமைக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். மேலும், அடுத்த பொதுத் தேர்தலைச் சந்திக்க இந்திய சமூகத்தைப் பிரதிநிதிக்கும் அமைப்புகளும் கட்சிகளும் ஒன் றிணைந்து செயல்படுவதற்கான வழிவகைகளைக் காணுமாறு மலேசிய இந்தியர் காங்கிரசிடம் திரு நஜிப் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார். "தேசிய முன்னணிக்கு இந்தியர்களின் ஆதரவு சிதறாமல் கிடைக்கும் வண்ணம் வியூ கத்தை உருவாக்க முடியும். ஒன்றுபட்டு முன்னேறுவோம்," என்று கூறிய திரு நஜிப், 'முன்னேறுவோம்' என்னும் மஇகா வின் கொள்கைப்பாடலின் முதல் இரு வாசகங்களைத் தமிழில் உச்சரித்தார். இந்தியர்களிடையே ஒற்றுமை யை வலியுறுத்திய அவர், "இந்திய சமூகத்தைப் பிரதிநிதித்து பல கட்சிகள் இருப்பது அந்த சமூகத்துக்கு மட்டும் தலைவலியைத் தரவில்லை எனக்கும் அது பெரிய தலைவலி என்பதை உணர்த்தும். மலேசியாவில் இந்தியர்கள் சிறுபான்மையினராக இருக்கலாம். ஆனால், இதர சமூகங் களைக் காட்டிலும் அந்த சமூகத்திடம் இருந்துதான் எனக்கு ஏராளமான கடிதங்கள் வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!