விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஹில்லரியின் உரைகளால் பிரசாரத்தில் சுணக்கம்

வா‌ஷிங்­டன்: அமெ­ரிக்க அதிபர் பதவிக்­கான ஜனநாயகக் கட்சி வேட்­பா­ளர் ஹில்லரி கிளிண்டன் வெளி­யு­றவு அமைச்­ச­கப் பணி­யி­லி­ருந்து விலகி அதிபர் வேட்­பா­ள­ராக உரு­வெ­டுப்­ப­தற்கு இடைப்­பட்ட காலத்­தில் ஆற்றிய மூன்று உரைகளை விக்­கி­லீக்ஸ் வெளி­யிட்­டுள்­ளது. அதிபர் தேர்தல் வாக்­கெ­டுப்பு நெருங்­கி­வ­ரும் இவ்­வேளை­யில் அமெ­ரிக்­கப் பங்­குச்­சந்தை­யின் மூன்று பெரிய நிறு­வ­னங்களு­டனான அவரது நட்­பு­றவைக் காட்டும் அவ்­வுரை­கள் வெளியாகி அவ­ருக்கு சங்க­டத்தை ஏற்­படுத்தியுள்ளன. பிரசாரக் குழுத் தலை­வ­ரான ஜான் போடெஸ்டா­வின் மின்­னஞ்சல்­களி­லி­ருந்து பல ஆவ­ ணங்கள் 'விக்­கி­லீக்'ஸால் கள­வா­டப்­பட்­டது பற்றி திருமதி ஹில்லரி உரையாடியிருந்தார்.

அந்தக் கள­வா­ட­லுக்கு ரஷ்ய அர­சாங்கத்தைக் குறை­கூ­றி­ யி­ருந்தது ஹில்லரியின் பிரசாரக் குழு. அமெ­ரிக்க அர­சாங்க­மும் இதே கருத்தைத் தெரி­வித்­ தி­ருந்தது. நிதிச் சட்­ட­திட்­டங்கள், ரஷ்ய அதிபர் விளா­டி­மிர் புட்­டி­னு­டனான உற­வு­முறை, அமெ­ரிக்க வெளி­யு­ற­வுக் கொள்கை­கள் பற்றி விக்­கி­லீக்­ஸின் முந்தைய வெளி­யீ­டு­க­ளால் ஏற்­பட்ட மோசமான விளை­வு­கள் ஆகி­ய­வற்றைக் குறிப்பதாக திருமதி ஹில்­ல­ரி­யின் அந்த உரைகள் இருந்தன. இவற்றின் தொடர்­பில் பொது­மக்­களி­டம் அவர் பகிர்ந்­து­கொண்ட கருத்­து­களி­லி­ருந்து விக்­கி­லீக்ஸ் வெளி­யிட்ட உரையில் குறிப்­பி­டத்­தக்க வேறு­பாடு­கள் இல்லை.

2013 ஆம் ஆண்டு அக்­டோ­பர் மாதத்­தில் அவர் கோல்ட்மென் சாக்­சிற்­காக ஆற்றிய உரையில், 'அர­சி­யல் கார­ணங்களுக்­காக' பங்­குச்­சந்தை வர்த்­த­கத்தை மேம் படுத்த ஏதாவது செய்தாக வேண்டும் என்று குறிப்­பிட்­டி­ருந்தார். இந்த உரை­களுக்­காக கோல்ட்மென் சாக்ஸ் நிறு­வ­னம் திருமதி கிளிண்ட­னுக்கு ஊதியம் வழங்­கி­யி­ருந்தது. தமக்கு ஊதியம் அளித்த நிறு­வ­னங்களை ஹில்லரியால் நெறிப்­படுத்­த இயலாது என ஜனநாயகக் கட்­சியைச் சேர்ந்த செனட்­டர் பெர்னி சாண்டர்ஸ் முன்பு ஹில்­ல­ரிக்கு எதி­ரா­க பிரசாரம் செய்துவந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!