பட்டத்து இளவரசருக்குப் பதிலாக முன்னாள் தளபதி பிரேம்

பேங்காக்: தாய்­லாந்­தின் பட்­டத்து இள­வ­ர­சர் மஹா வஜி­ர­லொங்­கோன் அவரது தந்தை­யான அரசர் பூமிபோல் அதுல்­ய­தேஜ் மறைந்த துக்­கத்­தில் இருக்­கும் இவ்­வேளை­யில் அரசுப் பொறுப்பை ஏற்­றுக்­கொள்­வதன் தொடர்­பி­லான முடிவைப் பின்னர் எடுக்­க­லாம் என்று கூறி­யி­ருப்­ப­தற்­காக மக்கள் வருத்­தப்­பட வேண்டாம் என தாய்­லாந்­தின் ராணுவ ஆட்சி மன்றத் தலைவர் தெரி­வித்­துள்­ளார். ராணுவ ஆட்சி, அர­சி­யல் சூழ்ச்­சி­கள், தெருப் போராட்­டங்கள் போன்ற­வற்றை அண்மைக் காலத்­தில் சந்தித்த தாய்­லாந்து மக்­களிடையே இந்த நட­வ­டிக்கை நிச்­ச­ய­மற்ற தன்மையை உரு­வாக் ­கியுள்­ளது. சென்ற வியா­ழக்­கிழமை தமது 88வது வயதில் உயிர்­நீத்த மன்னர் அதுல்­ய­தேஜ் நாட்டின் நிலைத்­தன்மை, தார்மீக ஆதரவு ஆகி­ய­வற்­றின் சின்­ன­மாக தாய்­லாந்து மக்­களுக்கு விளங்­ கினார். அவரது மறைவால் தாய்­லாந்து மக்கள் பெரிதும் சோக­முற்­றி­ருக்­கின்ற­னர். தாய்­லாந்­தில் பெரும்பா­லா­னோர் கறுப்பு நிற உடை­ய­ணிந்து துக்­கத்தை வெளிப்­படுத்­து­கின்ற­னர். மக்­க­ளோடு இள­வ­ர­சர்

வஜி­ர­லொங்­கோ­னும் துக்­கத்­தில் ஆழ்ந்­தி­ருப்­ப­தால், மன்­ன­ரால் அடுத்த மன்னர் என்று அடை­யா­ளம் காணப்­பட்ட அவர், முறையாக அப்­ப­தவியை ஏற்­றுக்­கொள்­வதைத் தள்­ளிப்­போட்­டி­ருக்­கிறார். அவ­ருக்­குப் பதிலாக 96 வயதான முன்னாள் தளபதி பிரேம் டின்­சு­லா­னோன்டா அரசுப் பொறுப் பேற்க நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். தம்மை­யும் தளபதி பிரேமை­யும் அர­சாங்கத்தை ஏற்று நடத்­து­மாறு பட்­டத்து இள­வ­ர­சர் வஜி­ர­லொங்­கோன் நிய­மித்­தி­ருப்­ப­தாக நேற்று முன்­தி­னம் ராணுவ ஆட்சி மன்றத் தலை­வ­ரும் நாட்டின் பிர­த­ம­ரு­மான சான் ஓ சா தொலைக்­காட்சி அறிக்கை­யில் கூறினார். மேலும் நாட்டு நிர்­வா­கம், வாரிசு பதவி­யேற்பு போன்றவை குறித்து வருத்­தமோ, குழப்­பமோ அடைய வேண்டாம் எனவும் தமது அறிக்கை­யில் அவர் சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!