பிலிப்பீன்சில் சரிகா சூறாவளி: பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

மணிலா: பிலிப்­பீன்­சின் லூஸே„ன் தீவை நேற்று சரிகா புயல் புரட்­டிப் போட்டது. பல கூரை­களைப் பிய்த்து எரிந்த சூறா­வ­ளிக்­காற்று மின்சார கோபு­ரங்களை­யும் சாய்த்­தது. 12,000க்கும் அதி­க­மா­னோர் பாது­காப்­பான இடங்களுக்கு அப்­பு­றப்­படுத்­தப்­பட்­ட­னர். சிறிய அளவில் நிலச்­ச­ரி­வும் வெள்­ள­மும் ஏற்­பட்­டி­ருப்­ப­தா­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்றன. ஒருவர் மாண்­டு­போ­ன­தா­க­வும் மூவர் காணாமல் போயி­ருப்­ப­தா­க­வும் கூறப்­பட்­டது. சூறா­வ­ளி­யால் ஏற்­பட்ட சேதத்தை உள்ளூர் அதி­கா­ரி­கள் கணக்­கிட்டு வரு­கின் ற­னர். புதை­யுண்ட சாலைகளை மீட்பது, மின்கம்பங்களைச் சீரமைப்­பது சேதங்களை அப்­பு­றப்­படுத்­து­ வது ஆகிய பணி­களில் ஊழி­யர்­கள் துரி­த­க­தி­யில் ஈடு­பட்­ட­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். கனத்த மழைப்­பொ­ழிவை அந்த வட்­டா­ரத்­தில் ஏற்­படுத்­திய சரிகா சூறாவளி, நேற்று பிற்­ப­கல் தென் சீனக் கடல் பகு­திக்கு நகர்ந்த­தாக வானிலை ஆய்வக அதி­கா­ரி­ கள் தெரி­வித்­த­னர். வ­ரும் வியா­ழக்­கிழமை­ 'ஹைமா' எனும் மற்றொரு புயல் அதே பகு­தியைத் தாக்கும் அபாயம் இருப்­ப­தா­க­வும் அதி­கா­ரி­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

சரிகா சூறாவளியால் பலர் வீடுகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். சிற்றோடை ஒன்றின் மீதிருக்கும் பாலத்தின் அடியில் தஞ்சம் புகுந்திருக்கும் இந்தக் குடும்பத்தைப் போன்று பலரது இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!