தாய். ராணுவம்: ஜனநாயக ஆட்சிக்குத் திரும்பும் திட்டத்தில் மாற்றம் இல்லை

பேங்காக்: தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜின் மறைவு, ஜனநாயக ஆட்சி முறைக்குத் திரும்பும் திட்டத்தை எந்த விதத்திலும் பாதிக்காது என்று தாய்லாந்து ராணுவம் உறுதி அளித்துள்ளது. மன்னரின் மறைவுக்குப் பிறகு அவரது பொறுப்பை ஏற்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள வேளையில் ராணுவ ஆட்சி தொடரக்கூடும் என்று மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சா தெரி வித்துள்ளார்.

முன்பு அறிவித்தது போல தாய்லாந்தில் ஜனநாயக ஆட்சி மலரும் என்று அவர் உறுதிய ளித்தார். திட்டமிட்டபடி 2017ஆம் ஆண்டு பிற்பகுதியில் தேர்தல் நடத்தப்படும் என்றும் இதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் கூறினார். பட்டத்து இளவரசர் வஜிரலங்கோன் புதிய மன்னராக பதவி ஏற்றுக்கொள்வதற்கு தமக்கு கால அவகாசம் தேவைப் படுவதாகக் கூறியுள்ளதால் ஆலோசனை மன்றத்தின் தலைவர் இடைக்கால ஆட்சிப் பொறுப்பை ஏற்கவுள்ள நிலையில் மக்களிடம் ஐயங்கள் எழுந்துள்ளன.

15 நாட்கள் துக்க தினத்தைப் பின்பற்றிய பின்னரே புதிய மன்னர் ஒருவர் அரியணையில் அமர முடியும் என்று திரு சான் ஓ சா கூறினார். மன்னர் பூமிபோலின் மறைவை முன்னிட்டு நாட்டு மக்கள் ஓராண்டு காலத்திற்கு துக்க தினத்தை கடைப்பிடிப் பார்கள் என்று கூறிய திரு சான், அதற்குப் பிறகு பட்டத்து இளவர சர் வஜிரலங்கோன் புதிய மன்னராக பதவி ஏற்றுக் கொள்வார் என்று சொன்னார். நாட்டு மக்களை ஒன்றுபடுத்தும் சக்தியாக விளங்கிய மன்னர் பூமிபோல் சென்ற வாரம் அவரது 88வது வயதில் காலமானார்.

மறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜின் நினைவாக வெளியிடப்பட்டுள்ள 100 பாட் நோட்டுகளுக்கு தாய்லாந்து மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த நோட்டுகளை வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விதிமீறுவோருக்கு 2009 போக்குவரத்துச் சட்டத்தின்கீழ் 500,000 ரூப்பியா (S$48) அபராதமும் இரு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். படம்: தி ஜகார்த்தா போஸ்ட் / ஏஷியா நியூஸ் நெட்வொர்க்

15 Nov 2019

ஜகார்த்தாவிலும் நடைபாதையில் மின்ஸ்கூட்டர் ஓட்டத் தடை

துப்பாக்கியில் இருந்த கடைசி தோட்டாவால் தன்னையே மாணவன் சுட்டுக்கொண்டான். படம்: ஸூமா / டிபிஏ

15 Nov 2019

பள்ளியில் துப்பாக்கிச்சூடு: இருவர் மரணம், மூவர் காயம்

பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுப்பயணிகள், ஆங்கோர் ஆலயத்தைச் சுற்றி வர யானைச் சவாரியைப் பெரிதும் விரும்புகின்றனர். படம்: ஏஎஃப்பி

15 Nov 2019

ஆங்கோர் வாட் ஆலயத்தில் யானைச் சவாரி ரத்து