பத்து மலை ஆலயத்தில் புதுப்பிப்புப் பணிகள்: நகராட்சி மன்றம் எச்சரிக்கை

பெட்டாலிங் ஜெயா: தைப்பூசத் திருநாளுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருப்பதால் மலேசியா வின் புகழ்பெற்ற பத்து மலை ஆலயத்தில் புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், புதுப்பிப்புப் பணிகள் தொடர்பில் எந்த அனு மதியும் பெறவில்லை எனக் கூறி, செலாயாங் நகராட்சி மன்றம் பத்து மலை ஆலய நிர்வாகத்திற்கு எச்ச ரிக்கைக் கடிதம் அனுப்பியிருக் கிறது. அதற்கு ஆலய நிர்வாகம் இரு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, சுற்றுலாப் பயணி களை அதிகம் கவரும் அப்புனிதத் தலத்தில் மேற்கொள்ளப்படும் புதுப்பிப்புப் பணிகள் பற்றிய திட்டம் குறித்து கடந்த மார்ச் மாதமே அந்த நகர மன்றத்திற்குத் தெரிவித்துவிட்டதாகவும் அந்தப் பணிகள் குறித்து விரைவில் நகராட்சி மன்ற அதிகாரிகளைச் சந்தித்து விளக்கவிருப்பதாகவும் ஆலய நிர்வாகக் குழு தெரிவித்து இருக்கிறது.

"குடமுழுக்கு விழாவிற்காக புதுப்பிப்புப் பணிகள் இடம்பெறு கின்றன. கனமழை பெய்யும்போது நீர் ஒழுகுவதால் மலையடிவாரத்தில் அமைந்துள்ள கோவிலின் கூரையை மட்டுமே விரிவுபடுத்து கிறோம். செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை," என்றார் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய நிர்வாகக் குழுவின் செயலாளர் சேது குமாரசாமி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!