மோசுல் தாக்குதல்: ரசாயன ஆயுதங்களை ஐஎஸ் பயன்படுத்தக்கூடும்

பாக்தாத்: ஐஎஸ் பிடியிலிருக்கும் மோசுல் நகரை ஈராக் ராணுவப் படையினர் நெருங்கி வருவதை அடுத்து ஐஎஸ் பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை மனிதக் கேட யமாகப் பயன்படுத்தி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. மோசுல் நகரில் சுமார் 700,000 பொதுமக்கள் சிக்கித் தவிப்பதாக நம்பப்படுகிறது. அமெரிக்கா உள் ளிட்ட ஆதரவு நாட்டுப் படை களுடன் ஈராக் ராணுவம் அந் நகரை மீட்க கடந்த திங்கட்கிழமை முதல் தாக்குதல் தொடுத்து வருகின்றனர். அந்த முயற்சியைத் தடுக்கும் நோக்கில் சுமார் 5,000 ஐஎஸ் போராளிகள் பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப் பினும், கூட்டணிப் படைகள் வழியிலுள்ள பல கிராமங்களை ஐஎஸ் வசமிருந்து விடுவித்துவிட்டன. வடக்குத் திசையில் இருந்து கூட்டணிப் படைகள், கீழ்த்திசையில் இருந்து குர்தியப் படைகள் என ஐஎஸ்ஸுக்கு எதிராக இரு முனைத் தாக்குதல் இடம்பெற்று வருகிறது. இதனால், ஈராக் அரசாங்க ஆதரவுப் படைகளை விரட்டும் நோக்கில் ரசாயன ஆயுதங்களை ஐஎஸ் அமைப்பினர் பயன்படுத்தக் கூடும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இருந்தாலும், அத்தகைய ஆயுதங் களை உருவாக்கும் அளவிற்கு ஐஎஸ்ஸிடம் போதிய தொழில் நுட்பத் திறன் இல்லை என்றும் நம்பப்படுகிறது.

இதற்கிடையே, மோசுல் நகரில் இருந்து சுமார் 900 பேர் தப்பி ஓடி, எல்லையைக் கடந்து சிரியா விற்குள் புகுந்துவிட்டதாக ஐநா அகதிகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம் கூறியிருக்கிறது. ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரான மோசுல் மீட்புப் போர் நேற்று மூன்றாம் நாளை எட்டிய நிலையில் இதுவரை குறைந்தது 50 ஐஎஸ் போராளி களும் ஈராக் ராணுவ வீரர்கள் இருவரும் கொல்லப்பட்டனர் என்றும் 25 வீரர்கள் காயமடைந் தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மோசுல் நகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பஜ்வானியா கிராமத்தை ஐஎஸ் பிடியிலிருந்து ஈராக் ராணுவத்தினர் விடுவித்ததையடுத்து அங்கிருந்து வெளியேறும் மக்கள். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!