ஜகார்த்தா தாக்குதலுக்கு காரணமான போராளிக்கு 10 ஆண்டு சிறை

ஜகார்த்தா: ஜகார்த்தா தாக்கு தலுக்கு காரணமான உள்ளூர் போராளி டோடி சுருடிக்கு (23) ஜகார்த்தா நீதிமன்றம் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி பயங்கரவாதிகள் நாட்டு வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். அந்த் தாக்குதலில் ஈடுபட்ட நால்வர் உள்பட 8 பேர் அதில் உயிரிழந்தனர். அத்தாக்குதலுக்கு உள்ளூர் தீவிரவாதிகளே காரணம் என்று இந்தோனீசிய அதிகாரிகள் கூறி வந்தனர். இந்நிலையில் அத்தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றொரு சந்தேகப் பேர்வழியான 47 வயது அலி ஹம்வாக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வெடிபொருள்கள் செய்வதற்கு அவ்விரு சந்தேகப்பேர்வழிகளும் ஆயுதங்கள் கொடுத்து வந்த தற்கான ஆதாரங்கள் உள்ளதாக நீதிமன்றத் தகவல் கூறியது. உள்ளூரில் உருவான அவ்விரு போராளிகளும் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதக் குழுவுடன் தொடர் புடையவர்கள் என்று கூறப்பட்டது. அவ்விருவரும் உள்ளூர் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த வர்கள் என்று இந்தோனீசியப் போலிசார் கூறினர்.