இறுதிச் சுற்று விவாதத்தில் ஹில்லரி- டிரம்ப் மோதல்

வா‌ஷிங்டன்: அமெரிக்கத் தேர்தலுக்கு இன்னும் 17 நாட்களே இருக்கும் வேளையில் ஆளும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹில்லரி கிளின்டனுக்கும் குடிய ரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்புக்கும் இடையே நடந்த இறுதிச் சுற்று நேரடி விவாதத்தில் இருவரும் கடுமையாக மோதிக் கொண்டனர். முதல் இரண்டு விவாதங்களைப் போலவே இந்தச் சுற்றிலும் தனிப்பட்ட குற்றச்சாட்டுகளே அதிமாக இடம்பெற்றன. இவ்விரு வேட்பாளர்களுக்கு இடையில் மூன்றாவது சுற்று விவாதம் புதன்கிழமை லாஸ் வேகசில் நெவடா பல்கலைக்கழகத்தில் நடந்தது. விவாதத்தின்போது தேர்தல் முடிவை ஏற்றுக்கொள் வாரா, மாட்டாரா என்பது குறித்து டிரம்ப் பதில் கூற மறுத்துவிட்டார். வரும் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைய நேர்ந்தால் தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்வது குறித்து உறுதியளிக்க அவர் மறுத்துவிட்டார்.

தேர்தலில் டிரம்பின் நிலையை விரிவாக எடுத்துரைக்குமாறு விவாத நிகழ்ச்சிக்கு நடுவராக செயல்பட்ட கிறிஸ் வாலஸ் பல தடவை வலியுறுத்தினார். ஆனால் டிரம்ப், “நேரம் வரும்போது அதற்கான விளக்கத்தைத் தருவேன். அதுவரை காத்திருங் கள்,” என்று கூறிவிட்டார். கடந்த பல நாட்களாகவே டிரம்ப், தேர்தலில் தனக்கு எதிராகத் தில்லுமுல்லு நடப்பதாகக் கூறி வந்திருக்கிறார்.

லாஸ் வேகசில் நடந்த இறுதிச் சுற்று விவாதத்தில் பங்கேற்ற ஹில்லரியும் டிரம்பும். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்
Gotabaya Rajapaksa has won the Sri Lankan presidency after a closely fought election

இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே

17 Nov 2019

தேர்தலில் வெற்றி; இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பாக போட்டியிட்ட டாக்டர் வீ ஜீ செங் 15,086 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். படம்: பெர்னாமா

17 Nov 2019

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் வெற்றி