யிங்லக் சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவு

பேங்காக்: தாய்லாந்தில் முன்னாள் பிரதமர் யிங்லக் ‌ஷினவத்ர அமல்படுத்திய அரிசி மானியத் திட்டம் தொடர்பாக தமது சொத்துகளை பறிமுதல் செய்ய நாட்டின் ராணுவ ஆட்சி மன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார். அத்துடன், அபராதத் தொகை யாக 35 பில்லியன் பாட் (S$1.38 பில்லியன்) கட்டவும் தமக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் ‌ஷினவத்ர சந்தை விலைக்கு அதிகமாக அரிசியை விவசாயிகளிடமிருந்து வாங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

அவருடைய இந்தத் திட்டமே அவர் 2011ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெரும் வெற்றி பெறக் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், நாட்டிற்கு பல பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட இந்தத் திட்டம் காரணமாக விளங்கியது என அவரது அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டு அவரைப் பதவியிலிருந்து வீழ்த்திய ராணுவ ஆட்சி மன்றம் அவர் மீது குற்றவியல் தண் டனைக்கு உட்பட்ட குற்றச் சாட்டுகளை சுமத்தியது.

நேற்று பேங்காக் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர் களை சந்தித்துப் பேசிய யிங்லக், தமது சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கான உத்தரவு தமக்கு இரு நாட்களுக்கு முன்னர் கிடைத்ததாகக் கூறினார். இது பற்றிக் கருத்துரைத்த யிங்லக், “அந்த உத்தரவு சரியான தல்ல, நியாயமானதும் அல்ல. “இதற்கு எதிராக நான் எனக் குள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்திப் போராடுவேன்,” என்று தெரிவித்தார்-. தாய்லாந்தின் அரிசி மானியத் திட்டம் யிங்லக்கின் சகோதரரும் மற்றொரு முன்னாள் பிரதமருமான தக்சின் ‌ஷினவத்ரவால் வகுக்கப் பட்டது.

இந்தத் திட்டம்தான் ‌ஷினவத்ர குடும்பத்தினர் ஆட்சி அதிகாரம் பெறக் காரணமாக இருந்ததாக பரவலாக நம்பப்படுகிறது. இவர் 2006ஆம் ஆண்டு நடந்த ராணுவப் புரட்சியில் பதவி இழந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. ‌ஷினவத்ர குடும்பத்தினரின் அரசியல் ஆதிக்கத்தை அழிக்க தாய்லாந்தின் ராணுவ ஆட்சி மன்றம் முயன்று வருவதாக யிங்லக்கின் ஆதரவாளர்கள் குமுறுகின்றனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஹாங்காங் பலதுறை தொழில் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல் குண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு இயக்கத்திற்கு ஆதரவாக ஒரு மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள நிலையில் அமெரிக்கா-சீனா இிடையே மேலும் விரிசல் ஏற்படக்கூடும் என்று தெரிகிறது. படம்: ஏஎஃப்பி

22 Nov 2019

ஹாங்காங்கில் பெற்றோர்களின் கவலை