அங்காரா: பிலிப்பீன்ஸ் அதிபர் டுட்டர்டெ அமெரிக்காவிடம் இருந்து தமது நாடு பிரிந்துவிட்டதாகக் கூறி சீனாவுடன் நட்புப் பாராட்டி வரும் வேளையில், பிலிப்பீன்ஸ் நாட்டுடனான தமது கடப்பாடுகளை அமெரிக்கா கட்டிக் காக்கும் என்று அமெரிக்க தற்காப்பு அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டர் கூறியுள்ளார்.
சீனாவுடன் தமது நாடு அணி சேர்ந்துள்ளதாக அதிபர் டுட்டர்டெ தெரிவித்துள்ளது பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த திரு கார்ட்டர், "எந்தவொரு நாட்டுடனான உறவும் பரஸ்பரத்தன்மை உடையது. இதன் தொடர்பில், நாங்கள் பிலிப்பீன்ஸ் நாட்டு அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடு படுவோம்," என்றார்.