டிரம்ப் வெளியிட்ட முதல் 100 நாள் திட்டம்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹில்லரி கிளிண் டனைவிட பின்தங்கியிருக்கும் குடியரசுக் கட்சி வேட்பாளரான டோனல்ட் டிரம்ப், தாம் அதி பரானால் முதல் 100 நாட்களில் அமலாக்கும் திட்டங்களை வெளி யிட்டுள்ளார். அதிபர் தேர்தலுக்-கு இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில் டோனல்ட் டிரம்பின் பிரசாரம் புதுப் புது சர்ச்சைகளைக் கிளப்பி வரு கின்றன. இந்த நிலையில் பென்சில் வேனியாவில் பேசிய திரு டிரம்ப் தாம் அறிமுகப்படுத்தும் மாற்றங் களைப் பட்டியலிட்டுள்ளார். இந்த மாற்றங்களில் பதவிக் காலம் முடிந்த பிறகும் அரசாங்கக் கொள்கைகளுக்கு ஆதரவு திரட்டு பவர்களாக மாறும் முன்னாள் வெள்ளை மாளிகை அதிகாரி களுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பது, வர்த்தக, பருவநிலை மாற்றங்களுக்கான உடன்பாடு களை மறு ஆய்வு செய்வது ஆகியவை அடங்கும்.

இரண்டு மில்லியனுக்கு மேற் பட்ட குற்றவாளிகளையும் சட்ட விரோத குடியேறிகளையும் வெளி யேற்றுவதும் திரு டிரம்பின் முதல் நூறு நாள் திட்டங்களில் சில. இதற்கிடையே 11வது ஆளாக ஆபாச படங்களில் நடிக்கும் 42 வயது நடிகை ஒருவர், டோனல்ட் டிரம்ப் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். நெவேடாவில் பத்து ஆண்டு களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு அறப்பணி கோல்ஃப் நிகழ்ச்சியில் டிரம்ப் தம்முடைய அனுமதியில் லாமல் கட்டியணைத்து முத்தமிட் டதாக ஜெசிக்கா டிரேக் கூறினார். ஆபாச படங்களின் இயக்கு நருமான ஜெசிக்கா டிரேக், 2006ல் சந்தித்தபோது டிரம்ப் தம்மிடம் தொலைபேசி எண்களைக் கேட்டு ஓட்டல் அறைக்கு அழைத்ததாகவும் சொன்னார். “டிரம்ப் உதவியாளர் என்று கூறி ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். 10,000 டாலர்கள் தருவதாகவும் உடனே டிரம்ப் ஓட்டல் அறைக்குச் செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.

குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப். படம்: பால் ஸாக்

இப்பகுதியில் மேலும் செய்திகள்
Gotabaya Rajapaksa has won the Sri Lankan presidency after a closely fought election

இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே

17 Nov 2019

தேர்தலில் வெற்றி; இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பாக போட்டியிட்ட டாக்டர் வீ ஜீ செங் 15,086 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். படம்: பெர்னாமா

17 Nov 2019

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் வெற்றி