ஜப்பான் பூங்காவில் குண்டு வெடிப்பு; ஒருவர் மரணம், மூவர் காயம்

தோக்கியோ: ஜப்பானில் உள்ள பூங்கா ஒன்றில் ஒரே சமயத்தில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார் என்றும் மூவர் காயம் அடைந்தனர் என்றும் உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்தது. தோக்கியோவிலிருந்து தெற்கே சுமார் 100 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள உட்சுனோமியாவில் உள்ள பூங்காவில் இரண்டு இடங் களில் ஒரே சமயத்தில் உள்ளூர் நேரப்படி 11.30 மணி அளவில் குண்டுகள் வெடித்தன.

குண்டு வெடிப்புக்கான காரணம் தெரியவில்லை. “ஒருவர் இறந்து கிடந்தார்,” என்று சம்பவம் பற்றிப் பேசிய தீ அணைப்புத் துறையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். மேல் விவரங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை. பூங்காவில் உள்ள சைக்கிள் நிறுத்துமிடத்தில் இறந்து கிடந்த நபரின் உடல் அடையாளம் தெரி யாத அளவுக்குச் சிதைந்திருந்தது. காயம் அடைந்த மூவரின் விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை என்று கூறிய பேச் சாளர், கார் நிறுத்துமிடத்தில் மற் றொரு குண்டு வெடித்தது என்று குறிப்பிட்டார். இதற்கிடையே ஜப் பானிய தொலைக்காட்சிகள் வெளியிட்ட படங்களில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஒரு கார் முற்றிலும் கருகிக் கிடந்ததைக் காண முடிந்தது.

ஜப்பான் பூங்காவில் இரண்டு குண்டுகள் வெடித்தன. படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கோலாலம்பூரில் உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தைவிட்டு வெளியேறும்போது தமது ஆதரவாளர்களுடன் காணப்படும் முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் (நடுவில்). படம்: இபிஏ

12 Nov 2019

தற்காப்பு வாதத்தை முன்வைக்க நஜிப்புக்கு உத்தரவு

ஹாங்காங்கின் சாய் வான் ஹோ பகுதியில் துப்பாக்கியைக் கொண்டு ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரைக் குறிவைக்கும் போலிஸ் அதிகாரி. படம்: ராய்ட்டர்ஸ்

12 Nov 2019

ஹாங்காங் கலவரம் தீவிரம்

நடைபாலத்தில் ஆடவர் மீது தீ மூட்டப்பட்டது. படம்: சவுத் சைனா மார்னிங் போஸ்ட்

12 Nov 2019

ஆடவர் மீது தீ மூட்டப்பட்டது