மலேசிய ரொட்டிக் கடை மன்னிப்பு கேட்டுக்கொண்டது

கோலாலம்பூர்: மலேசியாவில் பிரபல ரொட்டி கடைக்குச் சென்றிருந்த வாடிக்கையாளர் ஒருவர் ரொட்டி மீது எலி ஓடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதுகுறித்து அவர் கடை ஊழியர்களிடம் புகார் செய்ததைத் தொடர்ந்து கொமுகி ரொட்டிக் கடை அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டது. அந்தக் கடையில் எலிகள் இருப்பது தங்களுக்குத் தெரியும் என்றும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முயன்று வந்துள்ளதாகவும் கொமுகி கடை தெரிவித்தது.

எலித் தொல்லையிலிருந்து விடுபட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அக்கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தால் வியாபாரம் பாதிக்கப்படாது என்று தாங்கள் நம்புவதாகவும் அந்த உரிமையாளர் சொன்னார். ரொட்டித் துண்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தட்டு மீது ஒரு எலி ஓடுவதைக் காட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து இந்த விவகாரம் அங்கு பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஹங் ஹோம் பகுதியில் உள்ள ஹாங்காங் பாலிடெக்னிக் யூனிவர்சிட்டியிலும் ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்புவேலிகளை அமைத்தனர். படம்: ஏஎஃப்பி

13 Nov 2019

ஹாங்காங்கின் மத்தியப் பகுதியை முடக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள்; தொடரும் பதற்றநிலை

ரஷ்யப் படைகள் கடந்த மார்ச் மாதம் மேற்கொண்ட தாக்குதலில் அகேல் ஸைனல் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. படம்: தி ஸ்டார்

13 Nov 2019

‘ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த மலேசியர் கொல்லப்பட்டார்’

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளோட்டி எருமை மாட்டின்மீது மோதினார். படம்: தி ஸ்டார்

13 Nov 2019

எருமை மாட்டின்மீது மோதிய மோட்டார் சைக்கிளோட்டி மரணம்