இரண்டு ஆண்டுகளில் வெளிநாட்டுப் படைகளை வெளியேற்றுவேன் - டுட்டர்டெ

தோக்கியோ: பிலிப்பீன்ஸ் அதிபர் டுட்டர்டெ தான் இதுநாள் வரை கூறி வந்ததை வலியுறுத்தும் வித மாக அமெரிக்காவுடனான ராணுவ ஒப்பந்தங்களை ரத்து செய்யப்போவதாகக் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, தமது நாட்டி லிருந்து வெளிநாட்டுப் படையினர் அனைவரையும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் தாம் வெளியேற்ற உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஜப்பான் சென்றிருக்கும் பிலிப்பீன்ஸ் அதிபர் டுட்டர்டெ அங்கு ஜப்பானிலிருந்தும் பிலிப்பீன்சிலிருந்தும் வந்திருந்த சுமார் 1,000 தொழிலதிபர்கள் கூடியிருந்த பொருளியல் கருத் தரங்கில் உரையாற்றினார்.

அப்பொழுது, “இன்னும் இரண்டு ஆண்டுகளில் எனது நாட்டிலிருக்கும் அனைத்து வெளி நாட்டுப் படையினரும் வெளியேற வேண்டும் என்பதில் நான் உறுதி யாக இருக்கிறேன். “அதற்காக நான் ஒப்பந்தங் களை மாற்றியமைக்க, ரத்து செய்யவும் தயார்,” என்று முழங் கினார். பிலிப்பீன்ஸ் அதிபர் டுட்டர்டெ தான் தன்னிச்சையான வெளிநாட்டுக் கொள்கைகளைப் பின்பற்றப் போவதாகக் கூறியுள்ள போதிலும் வெளிநாட்டுப் படை யினர் தமது நாட்டிலிருந்து வெளி யேறுவதற்கு இரண்டு ஆண்டு காலக்கெடு விதித்திருப்பது இதுவே முதல் முறை என்று செய் தித் தகவல்கள் கூறுகின்றன.

உலக நாடுகள், மாறி வரும் பிலிப்பீன்ஸ் நாட்டின் சூழலை, ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் திரு டுட்டர்டெ கூறினார். “எமது நாட்டின் நன்மதிப்பும் கௌரவமும் அனைத்துலக அரங் கில் சேற்றில் புரட்டி எடுக்கப் படுவதை நான் அனுமதிக்கப் போவதில்லை,” என்று கூறிய திரு டுட்டர்டெ, தமது நாட்டில் நான்கு மில்லியன் போதைப் புழங்கிகள் உள்ளனர் என்றும் அதனால் போதைப் பொருளுக்கு எதிரான போர் அவசியமாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.