பள்ளிக்கூடம் மீது விமானத் தாக்குதல்

டமாஸ்கஸ்: சிரியாவில் ஒரு பள்ளிக்கூட வளாகம் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்கு தலில் குறைந்தது 20 குழந்தை கள் பலியாகினர். இது வேண்டுமென்றே நடத்தப் பட்ட தாக்குதல் என்றால், இது போர்க்குற்றம்தான் என ஐநா தெரிவித்துள்ளது. அத்தாக்குதல் குறித்து உடனடியாக விசாரணை மேற் கொள்ளப்பட வேண்டும் என்று ஐநா தலைமைச் செயலாளர் பான் கி மூன் கேட்டுகொண்டுள்ளார். சிரியாவின் வடக்குப் பகுதி கிராமத்திலுள்ள மூன்று பள்ளிக் கூடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் தொடர்பில் ரஷ்யா மீதும் சிரியா அதிபர் ஆசாத் மீதும் அனைத்துலக நாடுகள் கண்டனம் தெரிவித் துள்ளன.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும் கிளர்ச்சியாளர் படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 15- ஆம் தேதி உள்நாட்டுச் சண்டை தொடங்கியது. அவ்வப்போது சிறிய அளவில் சண்டை நிறுத்தம் அமல் படுத்தப்பட்டபோதும் தொடர்ந்து 6-வது ஆண்டாக இந்த உள்நாட்டுப் போர் நீடிக்கிறது. இந்தச் சண்டையில் ஏராள மானோர் உயிரிழந்தனர். ஆயிரக் கணக்கானோர் இடம் பெயர்ந் துள்ளனர். ஆனாலும் சண்டை முடிவுக்கு வரவில்லை. தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில் அங்குள்ள இத்லிப் மாநிலத்தில் ஹாஸ் என்ற கிராமத்தில் உள்ள பள்ளிக்கூட வளாகம் மற்றும் சுற்றுப்புறங்கள் மீது புதன்கிழமை போர் விமானங்கள் 6 முறை தாக்குதல்களை நடத்தின. இதனால் பள்ளிக் கட்டடங்கள் சேதம் அடைந்தன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பல்கலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியேற முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரை போலிசார் மடக்கிப் பிடித்ததில் அவர் காயம் அடைந்தார். ரத்தம் வடியும் முகத்துடன் இருந்த அவரைக் கைது செய்து கொண்டு செல்லும் அதிகாரிகள். படம்: ராய்ட்டர்ஸ்

19 Nov 2019

ஹாங்காங்கில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் காயம்

உறவினர்களையும் நண்பர்களையும் இழந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத மக்கள். படம்: இபிஏ

19 Nov 2019

காற்பந்து ரசிகர்கள் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் இருந்து சீனாவுக்குச் செல்லும் ‘பெய் பெய்’, கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி தனது நான்காவது பிறந்தநாளைக் கொண்டாடியது. படம்: இணையம்

19 Nov 2019

அமெரிக்காவிலிருந்து சீனா செல்லும் பாண்டா