மகளைச் சங்கிலியால் கட்டிப்போட்ட தாய்

கோலாலம்பூர்: மலேசியாவில் ஒரு தாய் அவரது எட்டு வயது மகளை சங்கிலியால் கட்டிப் போட்ட விவகாரம் சமூக வலைத் தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து மலேசியர்கள் பலர் தங்கள் சினத்தை வெளிப் படுத்தியுள்ளனர். ஒரு தாய் தன் மகளிடம் இவ்வளவு கடுமையாக நடந்து கொண்டதை பலர் கடுமையாகச் சாடியுள்ளனர். தன் மகள் பள்ளிக்கூடம் செல்ல மறுத்த தால் அதற்குத் தண்டனையாக மகளை இரும்புச் சங்கிலி கொண்டு ஒரு விளக்குக் கம்பத்தில் கட்டிப்போட்டதாக 30 வயதான மாது கூறியுள்ளார்.

பள்ளிச் சீருடை அணிந்திருந்த ஒரு சிறுமி விளக்குக் கம்பத்தில் கட்டப்பட்டுள்ள செய்தி கிடைத்ததும் போலிசார் அந்த இடத்துக்கு விரைந்து வந்ததாக சுபாங் ஜெயா போலிஸ் அதிகாரி முகம்மது அஸ்லின் சடாரி கூறினார். அந்த மாது தன் மகளைச் சங்கிலியால் கட்டிப் போட்டதை ஒப்புக்கொண்டதாக அஸ்லின் கூறினார். சிறுமியை விடுவித்த போலிசார் சிறுமியையும் அவரின் தாயாரை யும் விசாரணைக்காக அழைத் துச் சென்றனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தனக்காக ஒன்று, மனைவிகளுக்காக 19 என 20 ரோல்ஸ்ராய்ஸ் கார்களை மன்னர் மூன்றாம் ஸ்வதி வாங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. படம், காணொளி: ஸிலிக்காஸி என்பவரின் டுவிட்டர் பக்கம்

19 Nov 2019

15 மனைவிகளுக்கு 19 ரோல்ஸ்ராய்ஸ் கார்கள்

கடந்த ஆண்டு இந்தப் பதவியில் சேர்ந்த இவரது சம்பளம், 18 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் என்றும் கூறப்பட்டது.

19 Nov 2019

ஆஸ்திரேலியா: ஆக அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாகியாக இலங்கை பெண்மணி