மியன்மாரில் முதன் முறையாக ஸிக்கா கிருமி தொற்று

யங்கூன்: மியன்மாரில் முதன் முறையாக ஒருவருக்கு ஸிக்கா கிருமி தொற்றியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. யங்கூனில் வசிக்கும் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஸிக்கா கிருமி தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தொலைக்காட்சித் தகவல் தெரிவித்தது. ஸிக்கா கிருமி முதன் முறையாக சென்ற ஆண்டு பிரேசில் நாட்டில் பலருக்கு தொற்றியிருப்பது கண்டுபிடிக் கப்பட்டது.

இதுவரை 60 நாடுகளில் ஸிக்கா கிருமி பரவியது. இக்கிருமி கர்ப்பிணிப் பெண்களுக்குத் தொற்றினால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை களை அது வெகுவாகப் பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள் ளனர்.

சிறிய தலைகளுடன் பிறக்கும் அத்தகைய குழந்தை களின் மூளை வளர்ச்சியும் பாதிக்கப்படும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

யங்கூனில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஸிக்கா கிருமி தொற்றியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரிடம் மேலும் பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்கத்திற்குச் சொந்தமான தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மியன்மாரில் முதன் முறையாக ஸிக்கா கிருமி ஒருவருக்கு தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தகவல் அமைச்சின் பேச்சாளர் மியன்ட் காவ் கூறினார். ஏற்கெனவே சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் வசிக்கும் மியன்மார் நாட்டவர் இருவருக்கு அக்கிருமி தொற்றியிருப்பது கடந்த செப்டம் பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. ஸிக்கா கிருமி தொற்றினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடு பிரேசில். இங்கு 1,900 பேருக்கு ஸிக்கா கிருமி தொற்றியது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள். படம்: ஓமான நாட்டு குடிமைத் தற்காப்பு மற்றும் அவசர சிகிச்சை வாகனப் பிரிவு, காணொளி: PACDAOman

14 Nov 2019

ஆறு இந்திய ஊழியர்கள் மரணம்; ஒருவர் மதுரையைச் சேர்ந்தவர்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் அருகே புதர்த் தீ வேகமாகப் பரவி வரும் வேளையில், இந்த மாது தமது மகளைத் தூக்கிக்கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறுகிறார். படம்: இபிஏ

14 Nov 2019

புதர்த் தீ: 50க்கும் அதிகமான வீடுகள் சேதம்

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த மலேசியாவின் ‘ரோக் யுகேஸ்’ இசைக்குழுவின் கித்தார் கலைஞர் அகேல் ஸைனல். படம்: மலேசிய ஊடகம்

14 Nov 2019

ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த மலேசியர் கொல்லப்பட்டதாக தகவல்