துருக்கியில் அரசாங்க அதிகாரிகள் 10,000 பேர் நீக்கம்

அங்காரா: துருக்கியில் அரசாங்க அதிகாரிகள் 10,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். துருக்கியில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட புரட்சி தொடர்பில் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட் டுள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்விமான்கள், ஆசிரியர்கள், சுகாதார ஊழியர்கள், போலிஸ் அதிகாரிகள் உள்பட ஆயிரக் கணக்கானோர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றம், நீதிமன்றம், சமய விவகாரப் பிரிவு, நீதித் துறை, வெளியுறவு அமைச்சு, தேசிய கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, துருக்கிய ஆயுதப் படை ஆகியவற்றின் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் அடங்குவர். புதிய அவசரகால ஆட்சி உத்தரவின் கீழ் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

அமெரிக்காவின் ஆதரவு பெற்ற மதகுரு ஃபெதுலா குலனுடன் தொடர்பு வைத்திருக் கக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்ட பலரை பணிநீக்கம் செய்திருப்பதாக அதிகாரிகள் கூறினர். புதிய உத்தரவின் கீழ் பல ஊடக நிறு வனங்களும் செய்தித்தாட்களும் சஞ்சிகைகளும் மூடப்பட்டன. பிகேகே எனும் பயங்கரவாத அமைப்புக்காக பிரசாரத்தை அந்த நிறுவனங்கள் பரப்பி வந்ததாக நம்பப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விதிமீறுவோருக்கு 2009 போக்குவரத்துச் சட்டத்தின்கீழ் 500,000 ரூப்பியா (S$48) அபராதமும் இரு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். படம்: தி ஜகார்த்தா போஸ்ட் / ஏஷியா நியூஸ் நெட்வொர்க்

15 Nov 2019

ஜகார்த்தாவிலும் நடைபாதையில் மின்ஸ்கூட்டர் ஓட்டத் தடை

துப்பாக்கியில் இருந்த கடைசி தோட்டாவால் தன்னையே மாணவன் சுட்டுக்கொண்டான். படம்: ஸூமா / டிபிஏ

15 Nov 2019

பள்ளியில் துப்பாக்கிச்சூடு: இருவர் மரணம், மூவர் காயம்

பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுப்பயணிகள், ஆங்கோர் ஆலயத்தைச் சுற்றி வர யானைச் சவாரியைப் பெரிதும் விரும்புகின்றனர். படம்: ஏஎஃப்பி

15 Nov 2019

ஆங்கோர் வாட் ஆலயத்தில் யானைச் சவாரி ரத்து