வியட்னாமில் முதன் முறையாக ஸிக்கா பாதிப்பு

ஹனோய்: வியட்னாமில் முதன் முறையாக ஒரு குழந்தைக்கு மைக்ரோசிஃபாலி நோய் பாதித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வியட்னாமின் டக் லாக் மாநிலத்தில் நான்கு மாதக் குழந்தைக்கு அந்நோய் பாதித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அக்குழந்தையின் தாயார் கர்ப்பிணியாக இருந்தபோது அவருக்கு ஸிக்கா கிருமி தொற்றியிருந்ததாக அமைச்சு அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வியட்னாமில் இதுவரை 9 பேருக்கு ஸிக்கா கிருமி தொற்றியதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். ஸிக்கா கிருமி தொற்றினால் பாதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மைக்ரோசிஃபாலி நோயால் பாதிக்கப்படக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவித்துள்ளனர். இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகளின் தலை சிறியதாக இருக்கும். அத்துடன் அக்குழந்தை களின் மூளை வளர்ச்சியையும் அந்நோய் பாதிக்கும்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஹங் ஹோம் பகுதியில் உள்ள ஹாங்காங் பாலிடெக்னிக் யூனிவர்சிட்டியிலும் ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்புவேலிகளை அமைத்தனர். படம்: ஏஎஃப்பி

13 Nov 2019

ஹாங்காங்கின் மத்தியப் பகுதியை முடக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள்; தொடரும் பதற்றநிலை

ரஷ்யப் படைகள் கடந்த மார்ச் மாதம் மேற்கொண்ட தாக்குதலில் அகேல் ஸைனல் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. படம்: தி ஸ்டார்

13 Nov 2019

‘ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த மலேசியர் கொல்லப்பட்டார்’

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளோட்டி எருமை மாட்டின்மீது மோதினார். படம்: தி ஸ்டார்

13 Nov 2019

எருமை மாட்டின்மீது மோதிய மோட்டார் சைக்கிளோட்டி மரணம்