ஹில்லரி மின்னஞ்சல்களை விசாரிக்க உத்தரவு

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட் பாளரான ஹில்லரி கிளிண்டன் முன்னர் வெளியுறவு அமைச்சராக இருந்த போது அரசு தொடர்பான மின்னஞ்சல்களைத் தமது தனிப் பட்ட கணினியிலிருந்து அனுப்பிய விவகாரத்தை விசாரிக்கும் உத் தரவைப் பெற்றுள்ளார் எஃப்பிஐ எனப்படும் மத்திய புலனாய்வு அமைப்பின் தலைவரான ஜேம்ஸ் கோமி. அந்த மின்னஞ்சல்களில் அமெரிக்க அரசு பற்றிய ரகசியத் தகவல்கள் அடங்கியுள்ளனவா என்பதை விசாரிக்கும் பொறுப்பு அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்புக்கு உள்ளது குறிப்பிடத் தக்கது.

தற்பொழுது இதை விசாரிக்க உத்தரவு பெற்றிருப்பது அமெரிக்க ஜனநாயகக் கட்சி வட்டாரங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அதன் எதிரொலியாக அதிபர் தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் சட்டவிரோதமான செயலில் திரு ஜேம்ஸ் இறங்கியுள்ளதாக ஜனநாய கக் கட்சியின் முக்கிய புள்ளியான ஹேரி ரெய்ட் குற்றம் சாட்டியுள்ளார். எஃப்பிஐ இனி ஹில்லரி கிளிண்டன் 2009லிருந்து 2013 வரையிலான தமது பதவிக் காலத் தில் அரசு சேவைக்குத் தமது தனிப்பட்ட கணினியைப் பயன் படுத்தியது தொடர்பான விசார ணைக்கு உதவும் வகையில் இந்த மின்னஞ்சல்களில் ஏதேனும் உண்டா என்பது ஆராயப்படும்.

இது பற்றிய சர்ச்சை நீண்ட காலம் தொடருமானால் அதிபர் தேர்தலில் ஹில்லரி வென்ற பின்னும் இந்தப் பிரச்சினை அவரை பாதிக்கும் என்பதால் இந்த மின்னஞ்சல்கள் குறித்த முழு விவரங்களையும் வெளியிடு மாறு திருமதி ஹில்லரி உட்பட ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மின்னஞ்சல் கள் பற்றி அமெரிக்க நாடாளு மன்றத்திற்கு திரு ஜேம்ஸ் கோமி தெரிவித்துள்ளது இது தொடர் பான சர்ச்சையை பெரிதாக்கியுள்ளது.

திரு ஜேம்ஸ் கோமி அரசு பதவியைப் பயன்படுத்தி அதிபர் தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் சட்டவிரோதமான செயலில் இறங்கியுள்ளதாக ஜனநாயகக் கட்சியினர் ஒருபக்கம் குற்றம் சாட்ட, இந்தப் புதிய மின்னஞ்சல் விவகாரத்தை சுட்டிக்காட்டிய குடி யரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப், திருமதி ஹில்லரி ஊழலில் ஈடுபடுபவர், அவர் நம்பத்தகாதவர் என்று இது நிரூபிப்பதாகக் கூறுகிறார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி வென்றால், ஜோகூரின் தென்மேற்கே உள்ள குக்குப் பகுதிக்கும் சிங்கப்பூருக்கும் இடையே படகுச் சேவைகளைத் தொடங்க திட்டங்கள் இருப்பதாக மலேசிய உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசின் தெரிவித்துள்ளார். படம்: மலேமெயில், ஈசோப் மாட் இசா

15 Nov 2019

‘பக்கத்தான் ஹரப்பான் வென்றால் சிங்கப்பூருக்கும் ஜோகூரின் குக்குப் பகுதிக்கும் இடையே படகுச் சேவை 

நனைந்த துணியைப் பயன்படுத்தி தம்மால் முடிந்த வரை தீயை அணைக்க முயற்சி செய்யும் ஆடவர். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட புதர்த் தீயால் பல வீடுகள் அழிந்துவிட்டன. படம்: ஏஎஃப்பி

15 Nov 2019

ஆஸ்திரேலியப் புதர்த் தீ: மாண்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

மேடானில் நிகழ்ந்த தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்புப் பணிகளை இந்தோனீசியா முடுக்கிவிட்டுள்ளது. படம்: இபிஏ

15 Nov 2019

மனித வெடிகுண்டு தாக்குதல்: மேடானில் பாதுகாப்புப் பணிகள் தீவிரம்