சரண் அடையுமாறு ஐஎஸ் குழுவுக்கு ஈராக் வலியுறுத்து

பாக்தாத்: ஈராக்கில் ஐஎஸ் போராளிகள் வசம் உள்ள மோசுல் நகரைக் கைப்பற்ற ஈராக்கியப் படையினர் அந்நகரை நெருங்கியுள்ள வேளையில் ஐஎஸ் போராளிகளை சரண் அடைந்துவிடுமாறு ஈராக்கியப் பிரதமர் ஹைதர் அல் அபாடி கேட்டுக் கொண்டுள்ளார். மோசுல் நகரை ஈராக்கியப் படையினர் சுற்றி வளைத்துள்ள தால் அந்நகரில் உள்ள ஐஎஸ் போராளிகள் ஒன்று சரண் அடைய வேண்டும் அல்லது உயிர் இழக்க வேண்டும்; இது தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என்று திரு ஹைதர் அல் அபாடி கூறினார். தற்போது ஈராக்கிய சிறப்புப் படையினர் மோசுல் நகரிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளனர், அந்நகருக்குள் நுழைய அவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

இதற்கிடையே ஈராக்கிய ராணு வத்தினர் மோசுல் நகரின் தெற்குப் பகுதியிலிருந்து முன் னேறி வருகின்றனர். ஆகவே மோசுல் நகரின் எல்லா திசைகளையும் தாங்கள் மூட விருப்பதாகவும் இதனால் ஐஎஸ் போராளிகள் அங்கிருந்து தப்பிச்செல்ல முடியாது என்றும் ஈராக்கிய ஆயுதப் படையின் உயர் தளபதி ஒருவர் கூறியுள்ளார். ஈராக்கிய ராணுவத்தினர் திங்கட்கிழமை மோசுல் நகரின் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்குப் பகுகளில் உள்ள சில கிராமங்களை தங்கள் வசம் கொண்டு வந்தனர்.

ஐஎஸ் போராளிகளுக்கு எதிரான தாக்குதல்களில் ஈராக் கியப் படையினர், குர்தியப் படையினர் உள்பட சுமார் 50,000 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மோசுல் நகரை ஐஎஸ் போராளிகள் 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் தங்கள் வசம் கொண்டுவந்தனர். அந்நகரைக் கைப்பற்ற ஈராக்கியப் படையினர் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி முதல் பெரிய அளவில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந் நகரிலிருந்து இதுவரை 17,700 பேர் வெளியேறியுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!