புலனாய்வுத் துறையைச் சாடிய ஹில்லரியின் பிரசாரக் குழு

வா‌ஷிங்டன்: அமெரிக்கத் தேர் தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் ஆளும் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹில்லரியின் மின்னஞ் சல் விவகாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பதற்கு ஜனநாயகக் கட்சியினரும் ஹில்லரியின் பிரசாரக் குழு வினரும் கடும் கண்டனம் தெரி வித்துள்ளனர்.

ஹில்லரியிடம் மீண்டும் விசாரணை நடத்தவுள்ளதாக அறிவித்த புலனாய்வுத் துறை இயக்குநர் ஜேம்ஸ் கோமே 'பாரபட்சமாக' நடந்துகொள்வதாக ஹில்லரியின் பிரசாரக் குழு குற்றம் சாட்டியது. முடிந்துவிட்டதாகக் கருதப்பட்ட மின்னஞ்சல் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருப்பது வரும் தேர்தலில் ஹில்லரிக்கு பின்ன டைவை ஏற்படுத்தும் என்று கூறப் படுகிறது. ஹில்லரி வெளியுறவு அமைச் சராக இருந்தபோது அவரது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை அரசாங்கப் பணிக்கு பயன்படுத்தியதாகக் கூறப்படு கிறது.

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹில்லரி கிளின்டன், தமது பிரசாரக் குழுவுடன் விமானத்தில் சென்றபோது மாறு வேடத்தில் தோற்றம் அளிக்கக்கூடிய முகமூடியைக் கையில் வைத்தபடி நகைச்சுவையாகப் பேசி மகிழ்ந்தார். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!