சீனாவில் சுரங்க விபத்து; பலி எண்ணிக்கை உயர்வு

பெய்ஜிங்: சீனாவில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். எரிவாயு கசிவால் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று ஆரம்பக் கட்ட புலன்விசாரணைத் தகவல் கூறியது. விபத்து நிகழ்ந்தபோது அந்த சுரங்கத்தினுள் 35 ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. அந்த ஊழியர்களில் இருவர் மட்டும் உடனடியாக அங்கிருந்து வெளியேறி விட்டனர்.

விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் அவ்விடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இருப்பினும் யாரையும் உயிருடன் மீட்க முடியவில்லை. 15 சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் நேற்று மேலும் 18 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அந்த விபத்தில் 33 பேர் பலியானதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!