மோசுல் நகருக்குள் ஈராக் படை நுழைந்தது

பாக்தாத்: ஈராக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐஎஸ் போராளிகள் வசம் இருந்துவந்த மோசுல் நகருக்குள் ஈராக்கியப் படையினர் நுழைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மோசுல் நகரின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள பார்டாலா, பஸ்வாயா ஆகிய கிராமங்களைக் கைப்பற்றிய ஈராக் படையினர் ஜோக்ஜாலி கிராமத்தை நோக்கி முன்னேறிச் செல்வதாக ராணுவத் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜோக்ஜாலியில் உள்ள தொலைக்காட்சி நிலையம் தற்போது ஈராக்கியப் படை யினரின் கட்டுப்பாட்டில் வந் துள்ளது. மேலும் மோசுல் நகரின் தென் பகுதிக்குள் ஈராக்கியப் படையினர் முன்னேறிச் செல்வதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் முன்னேறி வரும் ஈராக் படைகளை எதிர்த்து ஐஎஸ் போராளிகள் கடுமையாகச் சண்டையிட்டு வருவதாக அப் பகுதியில் உள்ள பிபிசி செய்தி யாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈராக் படைகளைத் தடுக்க மக்களை பலவந்தமாக மோசுல் நகருக்குள் அனுப்பி அவர்களை தற்காப்புக் கேடயமாக ஐஎஸ் பயன்படுத்தி வருவதாக ஐநா தகவல் தெரிவித்துள்ளது. இருப்பினும் மோசுல் நகரம் முழுமையாக விரைவில் ஈராக் படையினரின் கட்டுப்பாட்டில் வரும் என்று ஈராக்கியப் பிரதமர் ஹைதர் அல் அபாடி தெரி வித்துள்ளார். அந்நகருக்குள் இன்னும் 3,000லிருந்து 5,000 வரையிலான ஐஎஸ் போராளிகள் இருக்கக்கூடும் என்று நம்பப் படுவதாகவும் அவர் சொன்னார். மோசுல் நகரைக் கைப்பற்ற ஈராக் படையினர் கடந்த மாதம் தாக்குதலைத் தொடங்கினர்.

போராளிகளுக்கு எதிரான இத் தாக்குதலில் ஈராக்கிய பாது காப்புப் படை, குர்தியப் படை மற்றும் அரபு பழங்குடி இனத்தைச் சேர்ந்த 50,000 பேர் ஈடுபட்டுள் ளனர். போராளிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டு தற்போது அரசாங்கப் படையினர் வசம் வந்துள்ள பகுதி களில் உள்ள மக்கள் ஆறுதல் அடைந்திருப்பதாகக் தெரிவித் துள்ளனர். பஸ்வாயாவைச் சேர்ந்த மக்கள் பலரும் வெள்ளைக் கொடி ஏந்தியவாறு ஈராக் படையை நோக்கி வந்ததாகக் கூறப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!