ஐஎஸ் சந்தேக நபர்களை துன்புறுத்தும் ஈராக்கிய ராணுவப் படை

பாக்தாத்: மோசுல் நகரிலிருந்து ஐஎஸ் போராளிகளை விரட்டி யடிக்கும் முயற்சியில் ஈடு பட்டுள்ள ராணுவப்படையினர், பழிவாங்கும் நோக்கத்துடன் அருகிலுள்ள கிராமங்களில் வாழும் ஆண்களையும் சிறுவர் களையும் தாக்குவதாக அனைத் துலக அம்னெஸ்டி அமைப்புக் கூறுகிறது. ஐஎஸ் போராளிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகச் சந்தேகிக்கப்படுவோர் பகிரங் கமாக அவமானப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, அடிக்கப் படுவதாக அம்னெஸ்டி அமைப்புக் கூறுகிறது.

ஒரு பள்ளிவாசலுக்குள் ஏராளமான மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். மோசுல் நகரில் ஒரு மில்லியன் பேர் உண்ண உணவு இன்றி தங்குவதற்கு இடமின்றி தவிப்பதாக நிவாரண உதவிக் குழுவினர் தெரிவித்துள்ளனர். படம்: ஏஎஃப்பி