கராச்சியில் இரு ரயில்கள் மோதல்: 20 பேர் பலி

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறைந்தது 20 பேர் உயிரிழந்த தாகவும் சுமார் 50 பேர் காயம் அடைந்ததாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முல்தான் நகரிலிருந்து புறப்பட்ட ஜகாரியா எக்ஸ்பிரஸ் ரயிலும் லாகூரிலிருந்து புறப்பட்ட ஃபாரீத் எக்ஸ்பிரஸ் ரயிலும் கராச்சியை அடுத்துள்ள லண்டி ரயில் நிலையம் அருகில் நேற்று மோதிக்கொண்டன. இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

காயமடைந்தவர்களை மீட்புக் குழுவினர் அருகேவுள்ள மருத்து வனையில் சேர்த்துள்ளனர். இன்னும் சிலர் ரயிலில் சிக்கி யுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப் படுகிறது. மீட்புக் குழவினர் தொடர்ந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கராச்சி நகரில் ஜகாரியா எக்ஸ்பிரஸ் ரயிலும் ஃபாரீத் எக்ஸ்பிரஸ் ரயிலும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இடத்தில் மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் ஏராளமானோர் அங்கு கூடியுள்ளனர். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விதிமீறுவோருக்கு 2009 போக்குவரத்துச் சட்டத்தின்கீழ் 500,000 ரூப்பியா (S$48) அபராதமும் இரு மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். படம்: தி ஜகார்த்தா போஸ்ட் / ஏஷியா நியூஸ் நெட்வொர்க்

15 Nov 2019

ஜகார்த்தாவிலும் நடைபாதையில் மின்ஸ்கூட்டர் ஓட்டத் தடை

துப்பாக்கியில் இருந்த கடைசி தோட்டாவால் தன்னையே மாணவன் சுட்டுக்கொண்டான். படம்: ஸூமா / டிபிஏ

15 Nov 2019

பள்ளியில் துப்பாக்கிச்சூடு: இருவர் மரணம், மூவர் காயம்

பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுப்பயணிகள், ஆங்கோர் ஆலயத்தைச் சுற்றி வர யானைச் சவாரியைப் பெரிதும் விரும்புகின்றனர். படம்: ஏஎஃப்பி

15 Nov 2019

ஆங்கோர் வாட் ஆலயத்தில் யானைச் சவாரி ரத்து