விடோடோவின் ஆஸ்திரேலியப் பயணம் ரத்து

ஜகார்த்தா: இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வன்முறை போராட்டங்களைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியப் பயணத்தை இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ ரத்து செய்துள்ளார். ஜகார்த்தா ஆளுநரான பசுக்கி ஜஹஜா புர்ணாமா, இஸ்லாமியர் களின் புனித நூலான குரானை அவமதித்ததாக தீவிரவாத கொள்கையுடைய இஸ்லாமியர்கள் கூறுகின்றனர்.

கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்த திரு புர்ணாமா, ஜகார்த்தா ஆளுநராக பதவி ஏற்றுள்ள முதல் சீன இனத்தவர் ஆவார். புனித நூலை அவமதித்த தற்காக ஜகார்த்தா ஆளுநர் பதவி விலகக் கோரி வெள்ளிக் கிழமை ஆயிரக்கணக்கானோர் அந்நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

ஜகார்த்தா ஆளுநர் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியதும் புகை பாதிப்பிலிருந்து தப்புவதற்கு அவர்கள் தங்கள் முகங்களை மூடிக்கொள்கின்றனர். ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் போலிசார் மீது கற்களை வீசியதாகவும் இரு வாகனங்களை தீ வைத்துக் கொளுத்தியதாகவும் கூறப்பட்டது. படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடந்த ஆண்டு இந்தப் பதவியில் சேர்ந்த இவரது சம்பளம், 18 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் என்றும் கூறப்பட்டது.

19 Nov 2019

ஆஸ்திரேலியா: ஆக அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாகியாக இலங்கை பெண்மணி

அமெரிக்காவில் இருந்து சீனாவுக்குச் செல்லும் ‘பெய் பெய்’, கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி தனது நான்காவது பிறந்தநாளைக் கொண்டாடியது. படம்: இணையம்

19 Nov 2019

அமெரிக்காவிலிருந்து சீனா செல்லும் பாண்டா